நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

பத்திரிக்​கைச்​ செய்திகள்

மே-6,  2017 அன்று THE HINDU நாளிதழில் நற்றி​ணைபற்றி ​வெளியான​ செய்தி​யை படிக்க இங்​​கே ​சொடுக்குங்கள்

THE HINDU

 

-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|-|

நற்றி​ணைபற்றி புதியத​லைமு​றை

13 ஜு​லை 2017 அன்று புதியத​லைமு​றை வாரஇதழில் நற்றி​ணையின் தமிழ்ச்​சே​வை குறித்து​வெளியான ​செய்தி இ​தோ:

தனி ஒருவன் ரேடியோ

ரெக்கார்டிங் ஸ்டூடியோ, மைக், ஸ்பீக்கர் எதுவுமே இல்லாமல் ஒரு எஃப்எம் ரேடியோ நடத்த முடியுமா? முடியும் என்று சாதித்துக் காட்டியதுடன், உலகம் முழுக்க ரசிகர்களுடன் அதை வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறார் திருச்சி ஞானப்பிரியன், செல்போன் மற்றும் இணையத்தை மட்டும் பயன்படுத்தி ஆன்லைன் எஃப்எம் நடத்தும் ஞானப்பிரியனிடம் பேசினோம்.
ஒரு பிரபல தனியார் செய்தித்தாள் நிறுவனத்தில் நான் லே-அவுட் டிசைனராக வேலை பார்த்து வருகிறேன். என் சின்ன வயசில் ஆல் இந்தியா ரேடியோ கேட்டு அன்றைய செய்தியை தெரிஞ்சிக்கிற பழக்கத்த வெச்சிருந்தேன். அதுபோல இலங்கை வானொலியில் மூழ்கிப்போய் சாப்பிட மறந்த காலங்களெல்லாம் உண்டு. ஆனால், இன்று விரல் நுனியில் செய்திகளை தெரிந்துகொள்ளும் தொழில்நுட்ப காலகட்டம். இதனால் முன்னோடி செய்தி நிறுவனங்களே ரேடியோ ஒலிபரப்பை நிறுத்தியுள்ளன. இந்நிலையில் என்னைப் போன்ற வானொலி நேயர்களுக்காகச் செவிவழி ஆடியோ (ரேடியோ) செய்தியைக் கொடுக்க வேண்டும் என்று ஒரு ஆசை ஏற்பட்டது.
முதலில், நட்பு வட்டத்தில் இருக்குறவங்களுக்கு பயனளிக்கற விதமாகச் செய்யலாம் என்று யோசித்தேன். முதல்நாள், அன்றைக்கு பேப்பரில் வந்த முக்கிய செய்திகளை செல்போன் ரெக்கார்டர் மூலமா பதிவு செய்து அதை நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் ஷேர் செய்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டேன். வேலையை முடிச்ச பிறகு, வீட்டுக்கு வந்த கையோடு நள்ளிரவுல மொபைல் டேட்டாவை ஆன் செய்து வாட்ஸ் அப்பை பார்த்தால், பெரும்பாலான நண்பர்கள் வாட்ஸ் அப்பில் என் முயற்சிக்கு வாழ்த்துச் சொல்லியிருந்தார்கள். நண்பர்களிடம் இருந்து அவங்களோட நண்பர்களுக்கெல்லாம் ஷேர் ஆகி, தெரியாத பலபேர் என் முயற்சிக்கு வாழ்த்து சொல்லி செய்தி அனுப்பியிருந்தார்கள்.
அதன்பிறகு, செய்தித் தாளில் வர்ற முக்கிய செய்திகளை பதிவுசெய்து, தொடர்ச்சியாக வாட்ஸ் அப்பில் ஷேர் செய்துகிட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் நண்பர்களின் ஊக்கத்துடன் “நற்றிணை செய்திச் சேவை” என்று பேரு வெச்சோம். திருச்சி மட்டுமில்லாம தமிழ்நாடு, இந்தியா, உலகம் முழுக்க இருக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் என்று என் செய்திச் சேவை பகிர்ந்து கொள்ளப்படுகிறது. நற்றிணையுடைய வாட்ஸ் அப் செய்திகள் பார்வையற்ற மாற்று திறனாளிகளுக்கு உதவுகிறதா மாற்றுத் திறனாளிகளே எனக்குப் போன் போட்டுச் சொன்னார்கள்.
அதன்பின்னர், அதுவரை செய்தி மட்டுமே சொல்லிவந்த நற்றிணையில், வாழ்க்கைக்கு நம்பிக்கை தரக்கூடிய கட்டுரைகள், நீதிக்கதைகள், வரலாறு, குறிப்புகள் என ஒவ்வொரு நிகழ்ச்சியாக வாட்ஸ் அப் மூலம் ஷேர் செய்தோம். இந்த நிகழ்ச்சிகளை எல்லாம் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள், பள்ளி செல்லும் குழந்தைகள், ஆசிரியர்கள், வரலாற்று ஆராய்ச்சியாளர்கள், நண்பர்கள், குடும்பப் பெண்கள்னு பலபோரோட ஒத்துழைப்போடு சாத்தியம் செய்தோம்.
ஒரு கட்டத்தில் வாட்ஸ் அப்புல ஒரு லிமிட்டுக்கு மேல செய்திகளைப் பகிர முடியாத சிக்கல் வர, அதற்குத் தீர்வா நற்றிணை செய்தி சேவையை இணையம் மூலமாக வழங்க முடிவு செய்து வலைப்பூ, வெப்சைட்டுனு புதிய தொழில்நுட்பங்களை அடாப்ட் செய்தோம். 2017 பிப்ரவரி மாதம் 10-லிருந்து நற்றிணை ஆன்லைன் எஃப்.எம் ஒலிபரப்பை ஆண்ட்ராய்ட் செயலி மூலமாகவும் துவக்க இருக்கோம். கூகிள் ப்ளே ஸ்டோர்ல நற்றிணை எஃம்,எம்-னு டைப் பண்ணி டவுன்லோடு செஞ்சுக்கலாம்.
தற்போது 24 மணிநேரமும் ஒலிபரப்பாகும் இந்த இணைய வானொலியில் மற்ற நேரங்களில் பழைய பதிவுகளையும் தரமான திரையிசைப் பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம். சுமார் 27 நபர்களின் பங்களிப்புடன் தற்போது நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம். நாங்க யாருமே இதுவரை ஒருவரை ஒருவர் சந்திச்சது கிடையாது என்பதுதான் இதன் ஹைலைட்” என்கிறார் ஞானப்பிரியன், உற்சாகமாக.

 

பின்குறிப்பு:​​​​ ​தொழில்நுட்ப ​மேம்பாட்டிற்காக நற்றி​ணை இ​ணையவா​னொலிச்​ சே​வை தற்காலிகமாக நிறுத்தி​ வைக்கப்பட்டுள்ளது.

 

3 Responses to பத்திரிக்​கைச்​ செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 131,732
  • 40,134
நேயர் கருத்து