Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

தினசரிச் செய்திகள், ஒருநிமிட யோசனை, சமையல் சமையல், தினம் ஒரு துளி, ஹாரிபாட்டர் நெடுந்தொடர், அறிவோம் அஞ்சல்தலை, சசிமாமாவும் அப்புவும் இன்னும் பல பயனுள்ள தகவல்களை தினந்தோறும் கேட்டுச் சுவைக்க www.natrinai.org என்ற இணையதளத்தை பார்வையிடுங்கள்

பரிசு யாருக்கு?

பள்ளி மாணவர்களுக்காக நற்றிணை அறக்கட்டளை நடத்தும்
நற்றிணையின்
உலகை வெல்லலாம்

  • படிப்பு மட்டுமே வாழ்க்கை அல்ல என்பதைப் புரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள். தோல்வியையும் வெற்றியையும் சமமாக நோக்கும் தெளிவு பெறுகிறார்கள்.
  • பொறாமை, விரக்தி, வஞ்சம் போன்ற எதிர்மறைகளை அகற்றிவிட்டு தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்முனைப்பு போன்ற உயர்ந்த எண்ணங்களோடு போராடும் துணிவு பெறுகிறார்கள்.
  • பிறக்கும்பொழுதே யாரும் திறமையாளர்கள் இல்லை. வாய்ப்புகளைச் சரியாக
    பயன்படுத்திக் கொள்பவர்களே திறமையாளர்களாக மிளிர்கிறார்கள்.  அத்தகைய வாய்ப்பை மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதே நற்றிணையின் நோக்கமாகும்.
  • www.natrinai.org என்ற இணையதளம் மூலமாக நற்றிணை அறக்கட்டளை தனது பயணத்தைத் தொடர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.
  • நமது இணையதளத்தில் "நற்றிணையின் உலகை வெல்லலாம்" என்ற நிகழ்ச்சி
    மூலமாகஒவ்வொரு நாளும் ஒரு மாணவர் தனது பேச்சுத் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பளிக்கிறது.
  • ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும் அந்த வாரத்தில் சிறந்தவராகத் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு மாணவருக்கு நற்றிணை வழங்கும் 500 ரூபாய் மதிப்புள்ள பரிசு வழங்கப்படும்.
  • மாணவர்களது திறமையை ஊக்குவிக்கும் இந்த சேவையில் மாணவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி உதவிசெய்யுமாறு ஆசிரியப் பெருந்தகைகளை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • போட்டி குறித்த சந்தேகங்களை எந்த ஒரு தயக்கமுமின்றி 8220999799 என்ற
    எண்ணில் நற்றிணையைத் தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம்.

போட்டிக்கான நிபந்தனைகள்:

  •  5 நிமிடங்களுக்கு மிகாமல் பேச்சு இருத்தல்வேண்டும்.
  •  தனது பெயர்,வகுப்பு.பள்ளியின் பெயர், பேசும் தலைப்பு ஆகிய விபரங்களை பேச்சின் துவக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
  • சமூகத்திற்குப் பயனளிக்கும் தலைப்புகளை மாணவர்கள் தாங்களாகவே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
  • ஆங்கிலக் கலப்பு இல்லாத தமிழுக்கும் தெளிவான உச்சரிப்பிற்கும் முன்னுரிமை தரப்படும்.
  • 8220999799 என்ற எண்ணுக்கு MP3 வடிவில் வாட்ஸப் வழியாக ஒலிப்பதிவுகளை அனுப்பலாம் அல்லது natrinaihelpcenter@gmail.com (or) info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவும் அனுப்பலாம்.
  • நடுவர் குழுவின் தீர்ப்பே இறுதியானது.

பழமையின் மணத்துடன்,
புதுமைகள் புரிவோம்.
சாதனைச் சிகரங்களாய்
சரித்திரம் படைப்போம்.

-அன்புடன்
நற்றிணைக் குழு

பரிசு யாருக்கு?

Neengalum Vellalam

Loading ... Loading ...

பரிசு யாருக்கு?

 

உங்கள் ஓட்டு யாருக்கு?

View Results

Loading ... Loading ...
Spread the love
  •   
  •   
  •  
  •  
  •  
  •  
  •  

Leave a Reply

Your email address will not be published.

நற்றிணைக்கு தங்களின் மதிப்பெண் எத்தனை? -தங்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி எது?