நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

02-04-2018 (Thamil Sevai-1045)

விமர்சனம்

ஒரு சிறிய நாட்டை அரசன் ஒருவர் ஆட்சி செய்து வந்தார். அதே நாட்டில் வாழ்ந்த அவரின் நண்பரான ஒரு அறிஞன், அரசரின் ராஜபோக வாழ்க்கையைப் பற்றி குத்தலாகப் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அரசரை பார்க்கும்போதெல்லாம்

“உனக்கென்னப்ப… நாட்டுக்கே நீ ராஜா. உனக்கு ஏதாவது கவலை இருக்கா… சொல்றதெல்லாம் செய்றதுக்கு வேலைக்காரங்க… அரண்மனை, சுகபோகங்கள், செல்வங்கள்…
நீ நினைச்சு நடக்காத ஏதாவது ஒன்னு உண்டா?” என்று கேட்பார்.

இதில் எரிச்சலான அரசர், அந்த அறிஞருக்கு பாடம் கற்பிக்க நினைத்தார்.

அதன்படி,
குறிப்பிட்ட நாளில், அறிஞர் அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார்.

ராஜ மரியாதைதான்..!

அரசருக்கான உடைகள் அணிவிக்கப்பட்டன. அரண்மனையில் அரசனுக்கு நிகராக அறிஞர், உட்கார வைக்கப்பட்டார். மேலும், அன்று முழுவதும் அறிஞரே அரசராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதைக்கண்ட அறிஞர், தனக்குத் தரப்பட்ட மரியாதையில் நெகிழ்ந்து போனார்.

அதன்பின்னர், தான் உட்கார்ந்திருந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தார். அப்போது, தலைக்கு மேலே பெரிய கத்தி ஒன்று தொங்கிக்கொண்டு இருந்தது. எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் இருந்தது!

குதிரையின் வாலில் இருந்து எடுக்கப்பட்ட ஒற்றை முடியில் அது ஊசலாடிக்கொண்டு இருந்தது.

அதை பார்த்த பிறகு அறிஞருக்கு ஒன்றும் புரியவில்லை. எந்த நேரமும் தலை போய்விடும் என்ற சூழ்நிலையில் அவரால் உல்லாசமாகவும் உற்சாகமாகவும் இருக்க முடியவில்லை. அதற்குப் பிறகு அவருக்கு சாப்பிடவும் தோன்றவில்லை.

நினைப்பெல்லாம் தலைக்கு மேல் தொங்கும் வாள் மீதே இருந்தது!

எழுந்து ஓடலாம் என்று முடிவு செய்து அதற்கு தயாராகியும் விட்டார். ஆனால் அந்த முயற்சியில் ஏதாவது அதிர்ச்சி ஏற்பட்டு குதிரை முடி அறுந்துவிட்டால் என்ன செய்வது என பயந்து, அப்படியே உட்கார்ந்து விட்டார்.

அதைப் பார்த்த அரசன், அதிகாரம் என்பது நீங்கள் எட்டி நின்று பார்க்கிற மாதிரி சுகமானது அல்ல. எந்த நேரமும் எதுவும் நடக்கும். கண்ணுக்குத் தெரியாத ஒரு கத்தி தொங்கிக்கொண்டே இருக்கும். நிம்மதிக்கே வழி இல்லை!

திடீரென எதிரிகள் படையெடுத்து வரலாம். நண்பர்கள்கூட துரோகிகளாக மாறி என்னை எதுவும் செய்யலாம். தலைவனாக சிம்மாசனத்தில் உட்கார ஆசைப்பட்டால், நீ எதற்கும் தயாராக இருக்க வேண்டும். அதிகாரம் வரும்போது ஆபத்தும் கூடவே வரும் என்றார்.

இதைக்கேட்ட அந்த அறிஞர், “என்னை மன்னித்துவிடு. உனது செல்வத்துக்கும், செல்வாக்கிற்கும் பின்னால் இத்தனை விஷயங்கள் இருப்பது இப்போதுதான் புரிந்தது என்றார்.

*நீதி : மேலோட்டமாக பார்த்துவிட்டு, மற்றவர்களை விமர்சிப்பதை தவிர்க்கவும்.

தொகுப்பு: வேலுச்சாமி

Hits: 133

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 142,876
  • 45,526
நேயர் கருத்து