நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

07-05-2018ThamilSevai1080

[lbg_audio7_html5 settings_id=’12’]

இல்லாத ஒன்று

ஓர் ஊரில் வேலைவெட்டி இல்லாமல் ஒருவன் இருந்தான். அவனுக்கு திருமணம் செய்து வைத்தார்கள். மனைவியும் வந்து சேர்ந்தாள். ஒரு நாள் மனைவி, தனது கணவனைப் பார்த்து, “சும்மாவே உட்கார்ந்து கொண்டு இருக்கிறீர்களே? சம்பாதிக்கிற வழியைப் பாருங்கள்” என்றாள்.

உடனே கணவன், “அது பற்றி தான் சிந்தித்து கொண்டிருந்தேன். ஒரு அருமையான திட்டம் எனது மனதில் உதித்துவிட்டது” என்று கூறினான்.

“என்ன திட்டம்?” என்று ஆவலோடு வினவினாள் அவனது மனைவி. “ஓர் ஆட்டுக்குட்டி வாங்கப் போகிறேன்” என்றான் கணவன். “சரி” என்றாள் மனைவி. “அதற்கான பணத்தை நீ தான் உன் அப்பாவிடம் கடனாக வாங்கித் தர வேண்டும். நான் மானஸ்தன். எனக்கு ஒன்றும் இனாமாக வேண்டாம். கடன் கொடுத்தால் போதும்” என்றான்.

“ஆட்டுக்குட்டியை வாங்கி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றாள் மனைவி. அதற்கு கணவன், “அந்தக் குட்டி வளரும். பிறகு நிறைய குட்டிகள் போடும்” என்றான். “பிறகு என்ன செய்யப் போகிறீர்கள்?” என்று கேட்டாள் மனைவி.

“அதையெல்லாம் சந்தையிலே கொண்டு போய் விற்றுவிட்டு, அந்தக் காசுக்கு ஒரு பசு மாடு வாங்குவேன்” என்றான் கணவன்.

“அது எதற்கு?” என்று கேட்டாள் மனைவி. எங்க அம்மா வீட்டுக்கும் பால் கொடுத்தனுப்பலாம்… “பசு மாடு நிறைய பால் கொடுக்கும். அதைக் கொண்டு போய் பால் பண்ணையிலே கொடுத்தால் நிறைய காசு கிடைக்கும். பாலையும் விற்கலாம், நாமும் காபி சாப்பிடலாம்; உடல் நலம் இல்லாத எனது தந்தைக்கு குடிக்க பால் கொடுக்கலாம்” என்றான் கணவன்.

உடனே மனைவி, “அடுத்த தெருவில் இருக்கும் எங்க அம்மா வீட்டிற்கும் கொஞ்சம் பால் கொடுத்தனுப்பலாம்” என்றாள்.

உடனே, கணவனுக்கு கோபம் வந்துவிட்டது. “அது எப்படி? உங்க அம்மா வீட்டுக்கு எதற்காக கொடுக்கணும்? அதெல்லாம் முடியாது.” என்றான்.

இந்த இடத்தில் சண்டை ஆரம்பமாகிவிட்டது. இரண்டு பேரும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார்கள். கடுமையாக சண்டை நடப்பதை அறிந்து, பக்கத்து வீட்டுக்காரன் ஓடி வந்தான்.

வாங்காத மாட்டிற்காக இவர்கள் இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

இருப்பினும், சண்டை போட்டுக் கொண்டிருக்கும் கணவன் – மனைவியைப் பார்த்து, “உன் மாடு என் தோட்டத்தில் மேய்ந்து பயிரை எல்லாம் நாசப்படுத்திவிட்டது. பத்தாயிரம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நீ நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்.” என்று கூறினான்.

இதைக் கேட்டு அரண்டு போன கணவன், பக்கத்து வீட்டுக்காரனைப் பார்த்து,

“என்ன உளர்றே… நான் இன்னும் மாடே வாங்கவில்லை. உனக்கு தோட்டமே இல்லை. மாடு எப்படி உன் தோட்டத்தில் மேயும்?” என்று கேட்டான்.

உடனே பக்கத்து வீட்டுக்காரன், “நீ தான் உளறுகிறாய். மாடே வாங்காமல் எப்படி உன் மனைவி அவங்க அம்மா வீட்டுக்கு பால் கொடுத்தனுப்ப முடியுமோ; அதே போலத்தான் அந்த மாடு இல்லாத என் தோட்டத்திலும் மேய்ந்தது” என்றான்.

அப்போதுதான் கணவனுக்கு புத்தி வந்தது. அர்த்தமே இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டு இருக்கிறோமே, என்பதை உணர்ந்தான்.

*நீதி* : இல்லாததைப் பற்றி விவாதித்து, இருக்கும் மகிழ்ச்சியை கெடுத்துக் கொள்ள வேண்டாம்.

*(ஒரு திருமண விழாவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா சொன்ன கதை இது)*

Hits: 151

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 142,876
  • 45,526
நேயர் கருத்து