நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

10-05-2018ThamilSevai1083

நற்றிணை தனது 4-வது ஆண்டில் அடியெடுத்து வைக்க தொடர்ந்து ஆதரவளித்து வரும் அன்பு நேயர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்


வாய்ப்புகள்

-சிறுகதை

விவசாயியின் அழகான மகளை திருமணம் செய்ய ஒரு இளைஞன் விரும்பினான். அந்த பெண்ணையே மணமுடிக்க வேண்டும் என கடவுளிடமும் வேண்டிக் கொண்டான்.

இதையறிந்த அந்த விவசாயி, “இளைஞனே.. நீ என் மகளை மணந்து கொள்ள விரும்பினால், நான் வளர்க்கும் மூன்று காளைகளை அடுத்தடுத்து அவிழ்த்து விடுவேன். அதில் ஏதாவது ஒன்றின் வாலை நீ தொட்டால் போதும். என் மகளை மணமுடிக்க சம்மதிக்கிறேன்” என்று சொல்ல அவனும் ஒத்துக்கொண்டான்.

மாடுகள் அடைக்கப்பட்டிருந்த தொழுவத்தின் கதவுகள் திறந்தது.

முதலில் ஒரு மாடு வந்தது. மிகவும் முரட்டுத்தனமான தோற்றம் கொண்ட அந்த மாடு சீறியபடி பாய்ந்து வந்தது.

அதைப்பார்த்த இளைஞன் வாலைப் பிடிக்க தயங்கி அடுத்த மாட்டைப் பார்க்கலாம் என்று விட்டுவிட்டான்.

சிறிது நேரத்தில் அதைவிட பெரிய மாடு வெளியே ஓடி வந்தது. பார்க்கவே பயங்கரமான தோற்றம் அவனை முட்டி மோதி கொல்வதற்காக கடும் வேகத்துடன் ஓடி வந்தது இளைஞன் அச்சப்பட்டு இதுவும் வேண்டாம்.
மூன்றாவதைப் பார்க்கலாம் என்று முடிவு செய்து, வேகமாக ஓடி பாதுகாப்பான இடத்தில் நின்று கொண்டான். ஓடிவந்த மாடு அதே வேகத்தில் வேலிக்கு வெளியே ஓடிச்சென்றது.

மூன்றாவது முறையாக கதவு திறக்க, அப்போது வெளியே வர தயாரான மாட்டைப் பார்த்து இளைஞன் முகத்தில் புன்சிரிப்பு வந்தது..

அவன் வாழ்க்கையில் பார்த்த்தில் இதுவே மிகவும் பலவீனமான மாடு.. எலும்பும் தோலுமாக பார்ப்பதற்கே, பரிதாபமாக ஓட முடியாமல் ஓடி வந்தது.

இந்த மாட்டைவிடக்கூடாது, இதை பிடித்து விட வேண்டும் என்று தீர்மானித்து அதன் வாலைத் தொட தயாராக இருந்தான்.

மாடு அருகில் வந்ததும் ஒரு தாவுதாவி மாட்டின் வாலைத் தொடப்போனான்.

ஆனால் அதிர்ச்சி காத்திருந்தது. ஆம்.. அந்த மாட்டுக்கு வாலே இல்லை..

ஆண்டுக் கணக்கில் காத்திருந்தும் அழகான அந்த பெண்ணை, மணம் முடிக்கும் வாய்ப்பு இளைஞனுக்கு பறிபோனது.

*நீதி* : இப்படித்தான் வாழ்க்கையிலும் பல வாய்ப்புக்கள் நமக்கு வழங்கப்படுகின்றன. சில வாய்ப்புக்கள் எளிதாகத் தோன்றலாம். சில வாய்ப்புக்கள் கடுமையாக இருக்கலாம்.
எளிதானவற்றுக்கு ஆசைப்பட்டு, கடுமையாக உள்ள வாய்ப்புகளைக் கண்டு ஒதுங்கி தவறவிட்டால், வாழ்வில் ஒரு காலத்திலும் வெற்றி பெறவே முடியாது..

Hits: 56

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 142,876
  • 45,526
நேயர் கருத்து