நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

12-05-2018ThamilSevai1085

முன்பொரு காலத்தில் அவர் ஒரு பெரிய வணிகர்…
வேலை விசயமாக எப்பொழுதுமே இங்கும் அங்கும் போவதும் வருவதுமாய் அவரின் நாட்கள் கழிந்தன….

ஒருநாள் விபத்தில் அவர் கால் காயமடைந்து, நடக்க முடியாத சூழல் ஏற்பட்டது..

சில நாட்களில் வேலைக்கு திரும்பிய அவர், போக்குவரத்திற்கு ஒரு கழுதையை உபயோக படுத்திக்கொண்டார்..

சில நாட்கள் அவர் கிழக்கு நோக்கி பயணிப்பார்.. .
சில நாட்கள் மேற்கு.., வடக்கு..,
என ஒழுங்கு இல்லாமல் இருந்தது.

அவரது பயணம் வழக்கத்துக்கு மாறாக இருந்ததால், பொது மக்கள் சிலர், ஒரு நாள் அந்த வணிகரை வழி மறித்து…

“ஏம்ப்பா.. கொஞ்ச நில்லு.

ஒருநாள் கிழக்கா போற..,
ஒருநாள் மேற்கா போற..

சிலநாள் உடனே திரும்புற..
சில நாள்ல ரொம்ப நேரமாகியும் ஆள காணலே..

அதேபோல.., திடீர்னு வேகம் வேகமா போற ..
அப்புறம் பார்த்தா மெதுவா நகர்ந்து போற.

ஒன்னும் விளங்கலயே… என்னாச்சு உனக்கு” என்றனர்.

” முன்ன மாதிரி இல்லங்க …

இப்ப இந்த கழுதையோட உதவி தேவைப்படுகிறது..
கட்டாயத்துல இருக்கேன்…

நான் போகச் சொல்ற இடத்துக்கெல்லாம், இந்த கழுதையை வரிசைப்படி போக சொன்னேன்…

ஆனா அது கேட்கல…

அதுக்காக
தொழிலை விட்டுட முடியாதுங்களே..
நமக்கு வேலையாகணும்…

அதே சமயத்துல கழுதைகூட லாம் மல்லுக்கட்ட முடியாது…

ஏன்னா அது கழுதை..

என்ன சொன்னாலும் அதுக்கு வெளங்காது..
.
அதனால… நான் கொஞ்சம் மாறிகிட்டேன்..

அது கிழக்கே போனா, நான், அங்க இருக்குற வேலைய முடிச்சுக்குறேன்..

மேற்கே போனா, அங்க இருக்குற வேலைய முடிச்சுக்குறேன் …

அது வேகமா போனாலும், மெதுவா போனாலும் அதற்கேற்ப பழகிகிட்டேன்…

இப்போ.. கழுதைக்கும் பிரச்சினை இல்ல..
நமக்கும் பிரச்சினை இல்ல….
தொழிலும், வாழ்க்கையும் நிம்மதியா போகுது ” என்றார்.

*நீதி* : வாழ்க்கையிலும், பணியிட சூழலிலும், கழுதை போன்ற நிறைய நபர்களுடன் நாம் பயணம் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அவர்களுக்கு சொன்னாலும் புரியாது,
புரிய வைப்பதும் கஷ்டம். தினந்தோறும் மல்லுக்கட்டவும் முடியாது. எனவே, நாம் அவர்களை, அவர்கள் வழிச்சென்று சற்று அனுசரித்துக் கொண்டால் நமக்கான வேலையும் நடக்கும்.
வாழ்க்கையும் நிம்மதியா இருக்கும்!!!

(இன்றைய பதிவுகள் தங்களுக்குப் பிடித்திருந்தால் Like பண்ணுங்கள். தங்கள் நண்பர்களும் இப்பகுதியைச் சுவைக்க விரும்பினால் Share பண்ணுங்கள். நன்றி)

Hits: 99

One Response to 12-05-2018ThamilSevai1085

  • நிகழ்ச்சி பாடல் அருமை லதாமங்கேஸ்சுவர் பாடிய பாடலை தமிழ் கவிஞர் கண்ணதாசன் பாடலை தமிழ் படத்தில் சேர்த்திருக்கும் செய்தி அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 185,975
  • 63,736
நேயர் கருத்து