நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

13-05-2018ThamilSevai1086

ஒரு வைத்தியர் நீண்ட நாட்களாக காட்டில் எதையோ தேடிக்கொண்டிருந்தார். அவர் (குரு) என்ன தேடுகிறார் என்று சீடனுக்கு தெரியாது! குருவும் சொன்னதில்லை!

சீடனின் வேலை அலைந்து திரிந்து வரும் குருவுக்கு உணவு சமைத்து வைப்பது, பரிமாறுவது, கைகால்கள் அமுக்குவது போன்ற பணிவிடைகள் தான்!

இப்படியே பல ஆண்டுகள் கழிந்து இருவருமே வயதாகி விட்டனர். ஆனாலும் தேடுவதை நிறுத்தவில்லை!

ஒருநாள் குரு வழக்கம் போல காட்டுக்குள் அலைந்து திரிந்து விட்டு வரும்போது அங்கே சீடனை காணவில்லை.

மாறாக இளைஞன் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.

குருவை பார்த்ததும் சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கினான்.

குருவுக்கு ஒன்றும் புரியவில்லை. யாரப்பா நீ என்று கேட்டார்.

அதற்கு அந்த இளைஞன் குருவே நான்தான் உங்கள் சீடன். என்றான்.

குருவுக்கு மிகவும் குழப்பம்.
என்ன நடந்தது என்று கேட்க சீடன் நடந்ததை சொல்ல ஆரம்பித்தான்

“குருவே! உங்களுக்காக கூழ் காய்த்து கொண்டிருந்தேன். காய்ச்சிய கூழை கலக்கும் கரண்டி உடைந்து விட்டது.

அதனால் அங்கே கிடந்த ஒரு குச்சியை எடுத்து கலக்கினேன். கூழ் மொத்தமும் கருப்பாகி விட்டது. அந்த கூழை இறக்கி வைத்து விட்டு வேறு கூழ் காய்ச்சினேன் குருவே. நீங்கள் வர தாமதமானதும் கருகி கிடந்த கூழை நான் குடித்து விட்டேன்.

குடித்த அரை நாழிகையில் எனது முதுமை போய் இப்படி இளைஞனாகிவிட்டேன்” என்றான்.

குரு பதறி அடித்துபோய் ” எங்கே அந்த குச்சி? இதை தானே நான் இத்தனை ஆண்டாக தேடிக்கொண்டிருந்தேன் ” என்று கேட்க அதற்கு அந்த சீடன் “அதை தான் நான் அடுத்த கூழ் காய்ச்சும்போது அடுப்பில் வைத்து எரித்து விட்டேனே? ” என்றான்.

குரு நெஞ்சடைத்து மயங்கி சாய்ந்தார்!

*நீதி*:

1. உன்னை நம்பி இருப்பவரிடம், உண்மையைச் சொல்வதில் தவறில்லை. அது நிச்சயம் உதவியாக இருக்கும்.

2. யாருக்கு எது கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும்.

(இன்றைய பதிவுகள் தங்களுக்குப் பிடித்திருந்தால் Like பண்ணுங்கள். தங்கள் நண்பர்களும் இப்பகுதியைச் சுவைக்க விரும்பினால் Share பண்ணுங்கள். நன்றி)

Hits: 34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 185,975
  • 63,736
நேயர் கருத்து