நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

1092-TamilSevai

ஒரு நாள் …எமதர்மன் ஒரு மனிதனிடம் வந்து சொன்னான் :

“மனிதா! இன்று உன்னுடைய வாழ்கையின் கடைசி நாள் ”

மனிதன் :…!!!!..ஆனா நான் உன்னுடன் வர தயாராக இல்லை !!

எமதர்மன் சொன்னான் : ” நல்லது. ஆனால் வேறு வழியில்லை. இன்று உன்னுடைய பெயர்தான், என் பட்டியலின் முதலில் உள்ளது …..”

மனிதன்: ” அப்படியா… சரி, நீங்கள் இருக்கையில் உட்காருங்கள், நாம் இருவரும் புறப்படுவதற்கு முன் ஒரு COFFEE சாப்பிட்டு விட்டு போகலாம்.”

எமதர்மன் : சரி., அப்படியே செய்யலாம் !

அந்த மனிதன் எமதர்மனுக்கு தூக்க மருந்து கலந்த COFFEE கொடுத்தான். குடித்தவுடன் எமதர்மன் நன்றாக தூங்கி விட்டான்!!!

மனிதன் உடனே அந்த பட்டியலை எடுத்து முதலில் இருந்த தன் பெயரை எடுத்துவிட்டு, கடைசியில் கொண்டு எழுதி வைத்தான் ….

எமதர்மன் தூக்கத்திலிருந்து எழுந்தவுடன் அந்த மனிதனிடம் சொன்னான்.. “நீ என்னிடம் மிகவும் நன்றாக, அன்பாக நடந்து கொண்டாய்..
என் சோர்வை போக்கி, களைப்பு நீங்கும் வகையில் உறங்க வைத்துள்ளாய்..
அதனால் நானும் உனக்காக, என்னுடைய முடிவை மாற்றி கொண்டேன்…

என்னவென்றால்..
இன்று ஒருநாள் மட்டும், எனது பட்டியலில் மேலிருந்து இல்லாமல் , கீழே இருந்து உயிர்களை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்றான் “!!!

இதைக்கேட்ட மனிதன், அப்படியே மயங்கி விழுந்தான்.

*நீதி* :

விதியே வலியது.

நீ எவ்வளவு முயற்சி செய்தாலும் கூட, மரணத்தை தடுத்து நிறுத்திட முடியாது. எனவே இருக்கும் நாட்களில் இன்பமாகவும், மற்றவர்களுக்கு பயனுள்ளதாகவும் வாழுங்கள்.

Hits: 14

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 142,876
  • 45,526
நேயர் கருத்து