நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

1212-TamilSevai

டாராஸ் ஷெலஸ்ட், என்பவர் ரஷ்யாவைச் சேர்ந்த விமானி.  இவர் பயணிகள் விமானத்தில்  5 ஆண்டு காலம் விமானியாக பணியாற்றியுள்ளார். ஆனால்  போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்வத்தின் காரணமாக சுயமாகவே விமானம் குறித்த அனைத்து விஷயங்களையும் கற்றிருக்கிறார். முறையாக எந்தப் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெறவில்லை, பயிற்சி எடுக்கவில்லை. 1974-ம் ஆண்டு மாஸ்கோ அருகே பிறந்தார். சிறிய வயதிலேயே விமானியாக வேண்டும் என்று கனவு. விமானப் பயிற்சி நிலையங்களுக்கு நண்பர்களுடன் செல்வார். விமானம் தொடர்பான புத்தகங்கள், கட்டுரைகளைத் தேடித் தேடிப் படிப்பார். நண்பரின் அப்பா உதவியோடு சிறிய விமானங்களை ஓட்டிப் பார்க்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றார். எல்லோரும் பொழுதுபோக்காகத்தான் கற்றுக்கொள்வதாக நினைத்தனர். ஆனால் டாராஸ் மிகவும் முனைப்பாக ஒவ்வொன்றையும் கற்றுத் தேர்ந்தார்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் விமானப் பயிற்சிக் கல்லூரியில் சேருவதற்காகப் பலமுறை தேர்வுகளை எழுதினார். அவரால் வெற்றி பெற முடியவில்லை. வேறு வழியின்றி ஒரு வீடியோகேம் விளையாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனாலும் விமானி ஆகும் லட்சியத்தைக் கைவிடவில்லை. ஒரு போலிச் சான்றிதழைத் தயார் செய்தார். ஓராண்டுக்குப் பிறகு மிகச் சிறிய விமான நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார். அவர்கள் வைத்த தேர்வுகளில் தேறினார். பயிற்சி பெற்றார். இறுதியில் விமானியாகப் பணியில் சேர்ந்துவிட்டர். கடினமாக உழைத்தார். மேலும் மேலும் ஆர்வத்தைப் பெருக்கிக்கொண்டார். சிறந்த விமானி என்று பெயரெடுத்தார். பிறகு மிகப் பெரிய ரஷ்யன் ஏர்லைன் நிறுவனத்தில் விண்ணப்பித்தார். தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்று, விமானியாக வேலையில் அமர்ந்தார்.

அதுவரை எந்த நிறுவனமும் இவரது சான்றிதழ் போலி என்று கண்டுபிடிக்கவில்லை.  உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். உக்ரைன் பகுதியிலிருந்து தொழில்நுட்ப மொழியில் சமிக்ஞைகள் வந்தன. அதற்கு ‘உக்ரைனுக்கு மகிமை’ என்று பதில் அனுப்பிவிட்டார் டாராஸ். அப்போதுதான் இவரது போலித்தனம் வெளிப்பட்டது. விமான நிறுவனத்துக்குப் புகார் சென்றது. விசாரணை ஆரம்பித்தது. “அவர் முறையாகப் படிக்கவில்லையே தவிர, மிகச் சிறந்த விமானியாக வேலை செய்தார். இதுவரை வேலை நிமித்தமாக சிறிய தவறு கூடச் செய்ததில்லை. ஆனால் விமானப் பணி என்பது எவ்வளவு முக்கியமானது. இதில் முறையாகப் பயிற்சி பெறாவிட்டால், தொழில்நுட்ப சமிக்ஞைகளைப் புரிந்து, அதற்கேற்ப செயல்பட முடியாது. எவ்வளவு பேரின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் இனி இவர் ரஷ்யாவில் விமானம்  ஓட்டக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.  டாரஸ், ‘என்னுடைய உண்மையான சான்றிதழ் தொலைந்துவிட்டது. அதனால் போலிச் சான்றிதழைப் பெற்றேன்’ என்றும் ரஷ்யாவுக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்.

இப்பதிவை உங்கள் நண்பர்களும் தெரிந்து கொள்ள share செய்யுங்கள்.

நன்றி

Hits: 15

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 165,845
  • 55,362