நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

1230-Tamil Sevai

நற்றிணை நேயர்களுக்கு ஒரு நற்செய்தி

கடந்த 13 வருடங்களுக்கும் மேலாக தனது பேச்சுத் திறத்தால் 5 லட்சத்துக்கும் அதிகமான நபர்களைக் கவர்ந்து புது சரித்திரம் படைத்து வரும் திரு.கார்த்திக் அவர்கள் நற்றிணை நேயர்களுக்காக கற்றதைப் பகிர்கிறார். உலகெங்கிலும் சிந்தனைக் கருத்துக்களை விதைத்துக் கொண்டிருக்கும் நண்பரின் பயிற்சிப் பட்டறையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலன்பெற்று தொழில் வல்லுநர்களாக, மிகச்சிறந்த படைப்பாளிகளாக வாழ்வை  செம்மையாக்கி சாதனை படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கனடாவில் உள்ள Junior Chamber International University-ல் 2011-ம் ஆண்டு சர்வதேச  திறன்மிகு பயிற்சியாளராக பாராட்டுப் பெற்று தமிழுக்குப் பெருமை சேர்த்தவர். பிரபல தொழில் நிறுவனங்களுக்கும், எண்ணற்ற கல்வி நிறுவனங்களுக்கும் திறன்மிகு ஆலோசகராக இருந்து வழிநடத்திக் கொண்டிருப்பவர்.
கல்லையும் கனியவைக்கும் தனது பேச்சுத் திறத்தால் சோர்ந்து கிடந்த உள்ளங்களைத் தட்டி எழுப்பி பல்லாயிரம் சுயசிந்தனையாளர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். இத்தனை சிறப்புகளோடு உலகை வலம் வந்து கொண்டிருக்கும் அருமை நண்பர் திரு. கார்த்திக் அவர்கள் நற்றிணை நேயர்களுக்காக நேரம் ஒதுக்கியிருப்பது கிடைத்தற்கரியதே.
நிகழ்ச்சி குறித்த கருத்துக்களை தாராளமாக கீழேயுள்ள comments பகுதியில் பதிவிடலாமே. அதன்மூலம் திறமையாளரை உற்சாகப்படுத்தி மேலும் பல கருத்துக்களையும் பெற்று மகிழலாமே.
என்றும் தமிழ்ச் சேவையில்
-நற்றிணைக்குழு

 

Hits: 179

One Response to 1230-Tamil Sevai

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 176,951
  • 60,190
நேயர் கருத்து