நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

1266 Tamil Sevai

தமிழகம்
1.அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வெளி மாவட்ட நெல் வரத்தைத் தடுப்பதற்காக மின்னணு சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

2.ஓய்வூதியதாரர்கள் தங்களது உயிர்வாழ் சான்றிதழ்களை கருவூலங்களிலேயே அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்தியா
1.ரூ.3,000 கோடி மதிப்புள்ள எதிரி சொத்துகளின் பங்குகளை விற்பனை செய்வதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

2.குஜராத்தின் ஆமதாபாத் நகரின் பெயரை “கர்ணாவதி’ என மாற்றம் செய்வது குறித்து அந்த மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

வர்த்தகம்
1.இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்தாண்டில் 7.3 சதவீதமாக குறையும் என மூடிஸ் “குளோபல் மேக்ரோ அவுட்லுக் 2019-20′ என்ற தலைப்பில் மூடிஸ் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது

2.அமெரிக்காவின், பிரபல டெஸ்லா மின்சார கார் தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து, இலான் மஸ்க் விலகியுள்ளார்.

3.குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ, திருவள்ளூர் மற்றும் வேலுார் மாவட்டங்களில், ஜி.எஸ்.டி., சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

உலகம்
1.அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் பதவியிலிருந்து ஜெஃபர்ஸன் செஷன்சை அதிபர் டொனால்ட் டிரம்ப் நீக்கியுள்ளார்.

2.இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியிலிருந்து தப்பி 907 யூதர்கள் வந்த கப்பலை திருப்பியனுப்பியதற்காக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கேட்டார்.

3.எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்த முதல் இந்திய மாற்றுத் திறனாளி பெண் அருணிமா சின்ஹாவுக்கு பிரிட்டனில் உள்ள ஸ்ட்ராத்கிளைட் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

விளையாட்டு
1.ஆசிய ஏர்கன் சாம்பியன் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் 16 வயதே ஆன வீரர் செளரவ் சௌதரி.
குவைத்சிட்டியில் நடைபெறும் இப்போட்டியின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை ஜூனியர் ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பிரிவில் 239.8 புள்ளிகளுடன் தங்கம் வென்றார் செளரவ். அதே பிரிவில் அர்ஜுன் 237.7 புள்ளிகளுடன் வெள்ளி வென்றார்.

2.ஒடிஸாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
மன்ப்ரீத் சிங் தலைமையில் 18 பேர் கொண்ட அணியை ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ளது.

Hits: 41

  • 178,174
  • 60,762
நேயர் கருத்து