நற்றிணை அறக்கட்டளையிலிருந்து
உலகத் தமிழர்களுக்காக ஒலித்துக் கொண்டிருக்கும் உன்னதமான ஒலிப்பேழை
நற்றிணை இணைய வானொலி

பேச்சுபோட்டி

பேச்சுபோட்டி- 2வது சுற்று

நற்றிணை அறக்கட்டளை நடத்தும் பள்ளி மாணவ-மாணவியருக்கான பேச்சுப்போட்டி

நற்றிணையின் 2-வது சுற்று பேச்சுபோட்டி 600-வது நாளன்று (12-01-2017)  நற்றிணை வலைதளத்தில் (www.natrinai.org) ஒலிபரப்பப்படும்.

மாணவர்கள் தங்களைப் பற்றிய அறிமுகத்துடன் பேச்சைத் துவங்க வேண்டும். பதிவுகள் வந்துசேர வேண்டிய கடைசி நாள்- 10-01-2017.

சாலைப்போக்குவரத்தில் விழிப்புணர்வு -என்ற தலைப்பில், 5 நிமிடங்களுக்கு மிகாமல்பேசி ஒலிப்பதிவு செய்து  8220999799 என்ற எண்ணுக்கு WhatsApp மூலமாகவோ  அல்லது info@natrinai.org என்ற முகவரிக்கு இ-மெயில் மூலமாகவோ அனுப்பவும்.

A பிரிவு – 5, 6-ம் வகுப்பு
B பிரிவு – 7,8-ம் வகுப்பு
C பிரிவு – 9,10-ம் வகுப்பு

ஒவ்வொரு பிரிவிலும் தேர்ந்தெடுக்கப்படும் 3 வெற்றியாளர்கள்  திருச்சியில் நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெறுவோருக்கு மெகா பரிசுகள் வழங்கப்படும். பரிசு வழங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

முயற்சி திருவினையாக்கும்

Share This:

பேச்சுப் போட்டி -முதல் சுற்று

நற்றிணையின் 600-வது நாளை நோக்கிய பயணத்தில் மாணவ-மாணவியருக்காக அறிவிக்கப்பட்டிருந்த பேச்சுப்போட்டியின் ஒலிப்பதிவுகள் இதோ.
தண்ணீரைப் பாதுகாப்போம், தமிழகத்தைத் தலைநிமிர்த்துவோம்– எனும் தலைப்பில் மாணவமணிகள் ஆற்றும் உரைகளைக் கேளுங்கள். நேயர்களே நீதிபதிகளாக இருந்து முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது பரிசுக்கு உரிய  வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுங்கள்.

A பிரிவு – 5, 6-ம் வகுப்பு
B பிரிவு – 7,8-ம் வகுப்பு
C பிரிவு – 9,10-ம் வகுப்பு

A பிரிவில் எந்த ஒரு நபரும் பங்கேற்கவில்லை.
B பிரிவில் பங்கேற்றுள்ள 5 நபர்களில் உங்களைக் கவர்ந்த 3 நபர்களை  வரிசைப்படி தேர்ந்தெடுங்கள்.
C பிரிவில் பங்கேற்றுள்ள 9 நபர்களில் சிறந்த 3 நபர்களைத் தேர்வு செய்யுங்கள்.
ஒவ்வொரு பிரிவிலும் 3 வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு போட்டியாளரும் பேசத் துவங்கும்போது அவருக்கான பதிவுஎண் அறிவிக்கப்பட்டுள்ளது.
3 வெற்றியாளர்களின் பதிவெண்களை வரிசைப்படுத்தி குறிப்பிட்டு நற்றிணையின் தொடர்பு எண்ணான 8220999799 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமாக தெரிவுசெய்து அனுப்பலாம். கீழேயுள்ள comments பகுதி மூலமாகவும் தங்கள் தெரிவுகளை பதிவு செய்யலாம்.

30-10-2016 மாலை 6.00 மணிக்குள் தங்கள் தெரிவுகளை அனுப்பவும்.
31.10.2016 அன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

நற்றிணையின் 525-வது நாள் அன்று பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இடையே நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்றோரின் பெயர்ப்பட்டியல்

B- பிரிவு

முதல் பரிசு –

அ. ஹர்ஷா, திருக்கோவிலூர் (B-101)

இரண்டாம் பரிசு-

கீர்த்தனா, நாமக்கல் (B-104)

மூன்றாம் பரிசு-

பாண்டிச் செல்வி, கந்தர்வகோட்டை (B-102)

C- பிரிவு

முதல் பரிசு –

சக்திவேல். விருதுநகர் (C-105)

இரண்டாம் பரிசு-

பவானி, கந்தர்வகோட்டை (C-107)

மூன்றாம் பரிசு-

ஐஸ்வர்யா, கந்தர்வகோட்டை (C-101)

இப்போட்டியில் கலந்துகொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் உண்டு.

 2 -வது சுற்று  பேச்சுபோட்டி பற்றிய  அறிவிப்பை   காண  இங்கு  கிளிக் செய்யவும் http://www.natrinai.org/q0dr5

Share This:

May 2017
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
பார்வைகள்
சமுக வலைகள்