நற்றிணை அறக்கட்டளையிலிருந்து
உலகத் தமிழர்களுக்காக ஒலித்துக் கொண்டிருக்கும் உன்னதமான ஒலிப்பேழை
நற்றிணை இணைய வானொலி

2015ம் ஆண்டு – மே மாதம் 23ந் தேதி – காலைநேரம்.

குடும்பத்தினர் அனைவரும் கோடைவிடுமுறைக்காக சொந்த ஊர்  சென்றிருந்தனர்.

காலைப்பொழுதின் தனிமையில் நாக்கு தேநீரைச் சுவைத்துக் கொண்டிருந்தது.

கண்கள் செய்தித்தாளில் மேய்ந்து கொண்டிருந்தன.

தனிமையில் இருந்ததால் எண்ணச்  சிறகுகள்  விண்ணில் பறந்தன.

செய்தித்தாள் படிக்கும் பழக்கம் எல்லோரிடமும் குறைந்துவருகிறதே.

தொலைக்காட்சி முன் அமர்ந்து செய்திகளை உள்வாங்க நேரம் இருப்பதில்லை.

வானொலிப் பெட்டிகளையும் அருங்காட்சியகத்தில்தான் பார்க்க முடிகிறது.

அணிவதற்கு உடை இருக்கிறதோ இல்லையோ அனைவரிடமும் அலைபேசி இருக்கிறது.

செய்திகளை அலைபேசியில் சேமித்து வைத்து தேவைப்படும்பொழுது கேட்கும் வசதி இருந்தால் எப்படி இருக்கும்?

பளிச்சென ஒரு மின்னல் வெட்டியது.

சிந்தனைப் பறவை வேகமாக சிறகடித்தது. சிந்தனை உடனடியாக செயலாக்கயப்பட்டது.

ஆம். அன்றைய செய்தித் தாளில் வெளிவந்திருந்த முக்கியச் செய்திகள் எழுதுகோலால் அடிக்கோடிடப்பட்டன.

அலைபேசியின் குரல்பதிவு செயலியில் தலைப்புச் செய்திகள் பதிவுசெய்யப்பட்டன.

பிரபலமாகிக் கொண்டிருந்த வாட்ஸ்அப் மூலம் அனைத்து நண்பர்களுக்கும் அனுப்பப்பட்டது.

எதிர்பார்தததைவிட அதிக வரவேற்பு கிடைத்தது.

சரிசெய்யப்பட வேண்டிய பல திருத்தங்களும் நண்பர்களால் அறிவுறுத்தப்பட்டன.

அந்த 2015ம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி தொடங்கிய நமது பயணம் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது நேயர்களின் அமோக ஆதரவுடன்.

பெயர் இல்லாத பிள்ளையாக வலம் வந்து கொண்டிருந்த ஒலிச்செய்திக்கு நல்லதொரு தமிழ்ப் பெயர் வைக்கலாம் என்று யோசித்தபொழுது நற்றிணை என்ற பெயர் தடாலென எண்ணத்தில் முளைத்தது.

நற்றிணையின் செய்திச் சேவை -என்ற துவக்கத்துடன் செய்திகள் வாட்ஸ்அப் மூலம் தமிழ் உள்ளங்களைக் கவர்ந்தது.

தான் பெற்ற ஒலிச்செய்தியை தமது குழுமங்களில் பகிர்வதை பழக்கமாக்கிக் கொண்டன சில நல்உள்ளங்கள்.

காட்டுத் தீயாக பரவிய நற்றிணை அயல்நாட்டுத் தமிழர்களால் பெரிதும் வரவேற்புப் பெற்றது.
போகிற போக்கில் பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான குழுமத்திலும் நற்றிணை நுழைந்தது.

நற்றிணையைத் தொடரலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருந்த தருணம் அது.

பெரும்பாலான பார்வை மாற்றுத் திறனாளிகளால் –கண்டிப்பாக தொடரப்பட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது

வெறும் செய்தியோடு இல்லாமல் வாழ்க்கைக்குப் பயன்தரும் கட்டுரைகளையும் வழங்கலாமே என்ற ஆலோசனை நேயர்களிடமிருந்து வந்துசேர்ந்தது.

உடனடியாய் முளைத்தது நித்தம் ஒரு முத்து.

எங்களது பங்களிப்பையும் நற்றிணை ஏற்றுக் கொள்ளுமா? என்ற நேயர்களின் ஆர்வத்தை பெரிதும் வரவேற்று ஏற்றுக் கொண்டது.

முதன் முதலாக தினம் ஒரு துளி என்ற தலைப்பில் திருமதி. அன்னலெக்ஷ்மி அவர்களால் சமையல் குறிப்பு மற்றும் எளிய மருத்துவ முறைகள் வழங்கப்பட்டன.

உலகத் தமிழர்களால் தினந்தோறும் எதிர்பார்க்கப்பட்டது -தினம் ஒரு துளி

மாணவ மணிகளுக்கு ஏதேனும் சிறுகதைகள் வழங்குவீர்களா? என்ற ஒரு மாணவரின் குரல் நேயர்குரலில் ஒலித்தது.

உடனடியாய் செல்வி  முக்கனி அவர்கள் மூலம் கதை சொல்லும் நீதி முளைத்து எழுந்தது.

இனிய குரலும் கதைசொல்லும் பாங்கும் உலகத் தமிழ் உள்ளங்களை ஒட்டு மொத்தமாய் கொள்ளையடித்தது,

இதுபோல் ஒவ்வொரு நிகழ்ச்சியாக அரங்கேறி நற்றிணையின் மெருகு கூடியது.

நேசகானம் என்ற இணைய வானொலியிலிருந்து அழைப்பு வந்தது.

நற்றிணையின் அனைத்துப் பதிவுகளையும் ஒலிபரப்ப ஒரு மணிநேரம் ஒதுக்கப்பட்டது.

அதன்படிதினமும் காலை 8 மணிமுதல் 9 மணிவரை நமது நற்றிணை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

பழைய பதிவுகளையும் புதிதாக இணையும் நேயர்களும் கேட்டு மகிழும் வகையில் நற்றிணை இணையதளம் ஆகஸ்டு-15ந் தேதி நற்றிணையின் 450-வது நிகழ்ச்சியன்று அறிமுகப்படுத்தப்பட்டது.

நல்உள்ளங்களின் ஆதரவோடும் அன்பு நேயர்களின் ஆசீர்வாதங்களோடும் நற்றிணை தமது பயணத்தை இனிதே தொடர்ந்து  கொண்டிருக்கிறது.

Share This:

கருத்துகள்
May 2017
M T W T F S S
« Apr    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
பார்வைகள்
சமுக வலைகள்