நற்றிணை அறக்கட்டளை

  • நமது நற்றிணை இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள நாட்காட்டியில் குறிப்பிட்ட தேதியை சொடுக்கினால் அதிலுள்ள ஒலிப்பதிவுகளை கேட்டு பயன்பெறலாம்.
  • ஊடகங்களில் வெளியாகும் தினசரிச் செய்திகள், அறிவுக்கும் மனதுக்கும் விருந்தளிக்கும் பல தகவல்களை நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும்  நிகழ்ச்சிப் பங்களிப்பாளர்களின் கூட்டு முயற்சியால் இடைவிடாது ஒலிக்கச் செய்கிறோம். 
  • தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்தி தமிழ்ப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு பத்திரமாக எடுத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.  
  • ஏழை எளிய மாணவர்களுக்கு உறுதுணையாய் இருக்கிறோம்.
  • மாற்றுத் திறனாளிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறோம்.
  •  திறமையாளர்களை இனங்கண்டு அவர்களின் வளர்ச்சிக்கு பக்கபலமாய் இருக்கிறோம்.
  • திருச்சியில் பார்வைமாற்றுத் திறன் மாணவர்களுக்கு உதவி செய்துவரும் ஜெகத்ஜோதி தன்னார்வலர் அமைப்புபற்றி இணையத்தில் அறிவிப்பு செய்து புதிய தன்னார்வலர்களை  இணைத்துள்ளோம்.
  • பார்வை மாற்றுத் திறன் மாணவர்களுக்கு புத்தகங்களை வாசித்து ஒலிப்பதிவு செய்துகொடுத்தல், இணையத்திலிருந்து  பதிவிறக்கம் செய்து கொடுத்தல், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்து கொடுத்தல் போன்ற உதவிகளை தன்னார்வலர்கள் மூலமாக செய்துவருகிறோம்.
  • எதிர்வரும் காலங்களிலும் நற்றிணை அறக்கட்டளை மூலமாக மேலும் பல சேவைகளைத் தொடர்வதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.
  • நற்றிணை அறக்கட்டளைக்கு மாதந்தோறும் ஒரு சிறு தொகையேனும் நன்கொடை அளித்து நமது தமிழ்சேவை மென்மேலும் தொடர தமிழ் உள்ளங்களை அன்புடன் அழைக்கிறோம்.

நேயர்களின் ஆதரவுடன் நற்றிணையின்  சில சமூகநல செயல்பாடுகள்

திருச்சி- துவாக்குடி NIIT-ல் நடத்தப்பட்ட பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கான கணிப்பொறி பயிற்சிக்காக நற்றிணை நேயர் திரு. கத்தார்-முருகன் அவர்கள் வழங்கிய  ரூ.10,000-க்கான காசோலையை,  ஜெகத்ஜோதி -பார்வையற்றோருக்கான வாசிப்பாளர் வட்ட வழிநடத்துனர் திரு.அப்துல்ஜாஃபர் அவர்களிடம் நற்றிணை ஒருங்கிணைப்பாளர் திரு. சசிகுமார்  அவர்கள் 2.1.2018 அன்று வழங்கினார்.

நற்றிணை நேயர்களால்  வழங்கப்பட்ட ரூ.5000-க்கான காசோலையை கந்தர்வகோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியையிடம் ஆண்டு விளையாட்டு  விழாவிற்கான நன்கொடையாக நற்றிணையின் தொழில்நுட்ப ஆலோசகர் திரு.எஸ்.எஸ். மணியன் அவர்கள் 05.01.2018 அன்று வழங்கினார்.

26.12.2016 முதல் 30.12.2016 வரை திருச்சியில் நடைபெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான கணிப்பொறி பயிற்சிக்கு நற்றிணை நேயர்கள் நன்கொடையாக வழங்கிய  ரூ.12,000  வழங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களிடையே இணையம் வழியாக நடத்திய பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளோம்.  

18 நவம்பர் 2018  கஜா புயல் வெள்ள நிவாரண நிதிக்கு நற்றிணை நேயர்கள் வழங்கிய ரூ.12,000/-க்கு அத்தியாவசிப் பொருட்கள் எடுத்துச் சென்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடிக்கு அருகிலுள்ள கிராமங்களில் வினியோகிக்கப்பட்டன.

தினசரி செய்தித் தாள்களில் வெளியாகும் முக்கியச் செய்திகளை வாசித்து இணையதளம், ஆன்ட்ராய்டு செயலி மற்றும் இணைய வானொலி மூலமாக ஒலிவடிவில் ஒலிபரப்புச் செய்கிறோம். இச்செயலைப் பாராட்டி THE HINDU மற்றும் புதிய தலைமுறை பத்திரிகைகள் செய்திகள்  வெளியிட்டன.

(CLICK HERE) 

Hits: 3069