தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!!
திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், ஆலத்தூர் கிராமத்தில் அமைந்துள்ள மிகப்பழமை வாய்ந்த அருள்தரும் சிவாலயம்

அருள்மிகு ஸ்ரீ ஆனந்தவல்லி உடனுறை ஸ்ரீ அமிர்தகடேசுவரர் திருக்கோயில்

ஆலய திருப்பணி அறிவிப்பு

ஆன்மீக அன்பர்களுக்கு வணக்கம்.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் ஆகம விதிப்படி முறையாக கட்டப்பட்டு வழிபாட்டில் இருந்து வந்த இத்திருக்கோயில் தற்போது முறையான பராமரிப்பு இன்றி சிதிலமடைந்து இருப்பதை கருத்தில் கொண்டு திருக்கோயில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு  அனைத்து மத சமயத்தினர்கள், அடியார் பெருமக்களின் முழு ஒத்துழைப்பாலும், உலகளாவிய ஆன்மீக சங்கம் (ISO) தமிழ்நாடு தூண்டுதலாலும், இந்து சமய அறநிலையத்துறையின் முழு ஒத்துழைப்பாலும் (18.06.2017) ஞாயிற்றுக்கிழமை காலை பூமிபூஜை செய்து பாலாலயம் செய்யப்பட்டுள்ளது, தற்பொழுது திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் இவ்வாலயத்தில் திருப்பணிகள் செய்ய வேண்டியுள்ளது.

பழுதடைந்துள்ள ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ அமிர்தகடேசுவரர், ஸ்ரீஆனந்தவல்லி, ஸ்ரீ நந்தியம் பெருமான், ஸ்ரீ தெட்சணாமூர்த்தி, ஸ்ரீவள்ளி தெய்வாணை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர்,
ஸ்ரீ சண்டிகேசுவரர் மற்றும் நவக்கிரகங்கள் திருப்பணிகள் செய்யப்பட உள்ளன. மேலும் ஸ்ரீ விநாயகர் திருக்கோவில்,
ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ பைரவர், தேவாரம் திருவாசகம், பெரியபுராணம் பாடி அருளிய ஸ்ரீ திருஞான சம்பந்தர், ஸ்ரீ திருநாவுக்கரசர்,
ஸ்ரீ சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஸ்ரீமாணிக்கவாசகர் மற்றும் திருத்தொண்ட புராணம் என்ற பெரியபுராணம் அருளிச் செய்த
ஸ்ரீ சேக்கிழார் சன்னதிகள், புதிதாக நமது ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. மேலும் ராஜகோபுரம் புதிதாக எழுப்பப்பட உள்ளது. திருக்கோவில் நான்கு புறமும் மதில் சுவர்கள் புதிதாக எழுப்பப்பட உள்ளன.
நாம் எத்தனை பிறவியில் என்ன என்ன புண்ணியம் செய்தோமோ, இறைவனுக்கு ஆலயம் கட்டக்கூடிய ஓர் அரிய வாய்ப்பை சிவபெருமான் நமக்கு தந்து அருளியுள்ளார்.

ஒரு சிவாலயத் திருப்பணி நடக்கும் பொழுது அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யார் ஒருவர் இறை தொண்டு செய்கின்றாரோ அவர் பல பிறவிகளில் செய்த பாவங்கள் நீங்கும் என்ற சான்றோர்களின் வாக்கு சத்தியமே. ஆகையால் அனைவரும் திருப்பணியில் பங்கு கொண்டு சிவபெருமானுடைய பரிபூரண அருளைப் பெறுமாறு அன்புடன் அழைக்கின்றோம். கும்பாபிஷேக விழா விரைவில் நடைபெற, பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற அளவு தளவாட சாமான்களாகவோ, பொருளாகவோ மற்றும் பணமாகவோ திருப்பணிக்கு வேண்டிய சிமெண்ட், செங்கற்கள், கருங்கல், மணல், ஜல்லி, கம்பிகள் மற்றும் தேவையான பொருள்கள் வழங்கியும், அனைத்து உதவிகளும் நல்கி, இம்மையிலும், மறுமையிலும் இறையன்பு சிவன் அருள் பெறுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

என்றும் இறைபணியில்
திருப்பணிக்குழு

நன்கொடை வழங்கும் வங்கி கணக்கு எண் :
R. RAJAPANDIAN, M.PALANIVEL (Joint Account)
Current Account: 37090677028
State Bank of India, Melakalkandarkottai Branch
IFSC Code: SBIN0018288   MICR Code : 620002064
28G, Kamarajar Salai, Melakalkandarkottai, Trichy – 620 011. Tamilnadu, India

தொடர்புக்கு
94436 48427, 94427 06123, 94431 36959, 94889 64317, 99435 21795, 98946 43336, 99940 63749

Hits: 742