* தினசரிச் செய்திகள் * ஒருநிமிட யோசனை * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பாட்டோடுதான் நான் பேசுவேன் * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் *வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் -போன்ற ஒலித் தொகுப்புகளைச் செவிமடுக்க www.natrinai.org என்ற இந்த இணைய தளத்திற்கு வருகை தாருங்கள்

Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

natrinai

1 2 3 26

1215-TamilSevai

தேங்காய் பவுடர்பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்

தேங்காய் ஒரு அற்புதமான உணவு என்றே கூறலாம். இது நிறைய விதங்களில் பயன்படுகிறது. தேங்காய், தேங்காய் தண்ணீர் மற்றும் தேங்காய் எண்ணெய் என்று பலவிதங்களில் இதை நாம் சமையலில் பயன்படுத்துகிறோம்.

ஆனால் தேங்காய் மாவை பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும் இந்த தேங்காய் மாவை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம்.

தேங்காய் துருவல்

மற்ற மாவுப் பொருட்களை ஒப்பிடும் போது இந்த தேங்காய் மாவு க்ளூட்டன் இல்லாத ஒன்றாகும். இந்த மாவு தேங்காய் பாலை பிரித்தெடுத்து விட்டு அதன் தேங்காய் துருவலை நன்றாக உலர வைத்து தயாரிக்கப்படுகிறது.

தேங்காய் மாவில் நார்ச்சத்துகள், ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன் போன்றவைகள் உள்ளன. சர்க்கரை சத்தும் குறைவாகவும், கார்போ ஹைட்ரேட், கலோரிகள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் கொண்டும் காணப்படுகிறது.

அமெரிக்க நீரிழிவு சங்க கருத்துப்படி இதிலுள்ள நார்ச்சத்துகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொடுக்கிறது. இதனால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. எனவே இந்த தேங்காய் மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். மேலும் டயாபெட்டீஸ் நோயாளிகள் தங்களுடைய எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இது உதவுகிறது.

தேங்காய் மாவில் அதிகளவு ஆரோக்கியமான சேச்சுரேட்டேடு கொழுப்பு உள்ளது. இது ஒரு மீடியம் சங்கிலி கொழுப்பு அமிலங்கள் வடிவில் உள்ளது. எனவே இந்த கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து மெட்டா பாலிசத்தை அதிகரிக்க செய்கிறது. இந்த மீடிய சங்கிலி கொழுப்பு தொடர் உடம்பில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது.

உங்களுக்கு மலச்சிக்கல் தொல்லை இருந்தால் தேங்காய் மாவு சிறந்தது. இதில் உள்ள கரையாத நார்ச்சத்துகள் மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. மேலும் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து சீரண ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது.

தேங்காய் மாவில் உள்ள அதிகப்படியான சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது. இது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை (LDL) குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் ஆன HDL அளவை கூட்டுகிறது. இதனால் உங்களுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

இந்த தேங்காய் மாவில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் நமது ஒரு நாள் தேவைக்கான புரோட்டீன் அளவை பூர்த்தி செய்கிறது. இதனால் செல்கள், தசைகளை சரி செய்து அது மீண்டும் புத்துயிர் பெற உதவுகிறது. நமது உடலில் உள்ள எலும்புகள், தசைகள், குருத்தெலும்புகள் மற்றும் சருமம் கட்டுமானத்திற்கு புரோட்டீன் சத்து மிகவும் அவசியம்.

தேங்காய் மாவில் ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளன. ஆன்டி மைக்ரோபியல் பொருளான தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் வாய் புண்ணிற்கு உதவுகிறது.

தேங்காய் மாவு க்ளூட்டன் இல்லாதது. அதாவது கோதுமை மாவில் உள்ள எலாஸ்டிக் தன்மை இதில் கிடையாது. அதிகமான க்ளுட்டனை எடுத்துக் கொள்ளும் போது அழற்சி நோய்களான முடக்குவாதம் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இந்த க்ளூட்டனால் மெட்டா பாலிக் சின்ட்ரோம், உடல் பருமன், நரம்பியல் பிரச்சினைகள், இதய நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

இந்த தேங்காய் மாவு இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் ஒரு அற்புத பொருள். இது ஸ்வீட் செய்யும்போதும் மற்ற இனிப்பு பலகாரங்களில் சேர்த்துப் பயன்படுத்தலாம். இது மற்ற பொருட்களுடன் எளிதாக கலந்து கொள்வதால் பிசைவதற்கும் எளிதாகவும் அதே நேரத்தில் நல்ல சுவையையும் லேசான நறுமணத்தையும் கொண்டு இருக்கிறது.

எனவே இந்த தேங்காய் மாவை வேற எந்த மாவுடன் வேண்டுமென்றாலும் சேர்த்து நிறைய டிஷ்கள் செய்து நன்மைகளைப் பெறலாம். சமையலில் இந்த தேங்காய் மாவு, சூப் போன்றவற்றை அடர்த்தியாக்க திக்காக மாற்ற சேர்க்கப்படுகிறது.

இது குறித்த தங்கள் கருத்துக்களை Comment பகுதியில் பதிவிடுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள். நன்றி.

1214-TamilSevai

பிள்ளையாரின் வாகனமாக எலி எப்படி வந்தது?

இறைவன் கணபதி, முழுமையின் ஒரு வடிவமாக உள்ளார் .அவர் தனது பக்தர்களின் வினைகளை நீக்குவது மட்டுமல்லாமல் சரியான வழிகாட்டியாகவும் விளங்குகிறார் . லக்ஷ்மி தேவி, தன் உடலில் பூசிய சந்தனப் பொடியில் இருந்து தோன்றியவர் அவர் என்று நமக்குத் தெரியும். அவர் சிவபெருமானின் மகன் என்பதையும் நாம் அறிவோம்.

இங்கே விநாயகர் பற்றி உங்களுக்கு தெரியாத மேலும் சில சில சுவாரஸ்யமான உண்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒரு சமயம் பார்வதி தேவி குளிக்கும்போது கணேசன் அவருக்கு காவலிருந்தார் . சிவபெருமான் வந்து தனது வீட்டிற்குள் செல்ல விரும்பியபோது, ​​விநாயகர் அவரை அறியவில்லை, எனவே அவரை தன் வீட்டிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. சிவன், இந்த புதிய பையன் யார் என்று தெரியாத கோபத்துடன், விநாயகர் தலையை வெட்டினார். சிவன் தனது தவறை உணர்ந்தபோது, ​​யானையின் தலையை கணபதிக்கு அளித்து , அந்த சிறுவனை மீண்டும் உயிருடன் கொண்டுவந்தார். அப்போது, ​​யானைத் தலை கொண்ட ஒரு மனித உடலின் அமைப்பைக் காணும்போது ஏதோ ஒரு முழுமையற்ற அமைப்பாகத் தோன்றியது. எனினும், இந்த தெய்வம், கணேஷனுக்கு , மேலும் அவரது தந்தை சிவபெருமான் “இந்த பரிபூரணமற்ற உருவத்தை வழிபடும் பக்தர்களின் அனைத்து தடைகளையும் அகற்றி அவர்களுக்கு பரிபூரணத்தை அளிப்பார்” என்ற ஒரு வரம் அளித்தார். எனவே, அவர் பரிபூரணத்தின் பரிபூரண உருவமாகவும் அறியப்படுகிறார்.

மகாபாரதத்தை உண்மையில் விநாயகர் எழுதியதாக நம்பப்படுகிறது. மகாபாரதத்தை இயற்றிய ஆசிரியர் வேதவியாஸர் , ​​அதை எழுதியவர் கணேஷ் என்று கூறுகிறார். இதை எழுதும்போது விநாயகர் மற்றும் வேதவியாஸருக்கு இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அது , வியாசர்  ஆரம்பம் முதல் முடிவு வரை தடையின்றி நிறுத்தாமல் ஓத ஓத விநாயகப்பெருமான் அனைத்தையும் புரிந்து மகாபாரதம் எனும் மாபெரும் காவியத்தை எழுதி முடிக்கவேண்டும் என்பதேயாகும்.

இந்தோனேசியாவின் 20,000 ருபியா தாள்களில் கணேசாவின் உருவப்படம் அச்சிடப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் கிட்டத்தட்ட நான்கு மில்லியன் இந்துக்கள் உள்ளனர். பௌத்தத்திலும் புத்த மதத்திலுள்ள மஹாயான பிரிவில் ஒரு தெய்வமாக விநாயகர் கருதப்படும் பெருமையும் கொண்டவர். அவர் அங்கு நடனமாடும் தெய்வமாகக் காணப்படுகிறார்.

விநாயகருக்கு ரித்தி மற்றும் சித்தி என்று இரண்டு மனைவிகள் உள்ளதாக நம்பப்படுகிறது. ரித்தி என்பது செழிப்பு, சித்தி என்பது வெற்றி. சுப் மற்றும் லப் என்று அவருக்கு இரண்டு மகன்களும் உண்டு. மங்களம் என்று பொருள்படும் “சுப்” ரித்தி மற்றும் கணபதியின் மகன் என்று நம்பப்படுகிறார், அதே நேரத்தில் லப் சித்தியின் மற்றும் கணேஷனின் மகனாகவும் நம்பப்படுகிறார். அதனால்தான், அவர் செழிப்பு, வெற்றி, நற்செய்தி மற்றும் அனைவருக்கும் இலாபம் என்ற அனைத்தையும் ஒருசேர வழங்குபவர் என்று கூறப்படுகிறது. எனவேதான், ஒவ்வொரு பணி மற்றும் நிகழ்வின் ஆரம்பத்தில் நாம் விநாயகரை வழிபட்டு வேண்டி அழைக்கிறோம்.

விநாயகர் ஒரு யானைத் தலையைக் கொண்டிருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் அவருடைய ஒரு தந்தமும் உடைந்துவிட்டது என்று உங்களுக்குத் தெரியுமா?  ஒருமுறை கணேசன் ஒரு காவலாளியாக கயிலாயத்தில் நின்று கொண்டிருந்தார். சிவபெருமானைப் பார்க்க போர்வீரன் விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் வந்தார்.பரசுராமர் விஷ்ணுவின் வடிவம், மற்றும் அவரது உயர்ந்த கோபகுணநலனுக்காக அறியப்பட்டவர். கணேசன் அவரை உள்ளே வர அனுமதிக்காத போது, ​​இறைவன் பரசுராமர் தனது கோடாரியை அவர் மீது எறிந்தார். அந்தக் கோடாரியை பரசுராமருக்கு வழங்கியது தன் தந்தை சிவபெருமான் என்பது விநாயகருக்குத் தெரிந்திருந்ததால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். எனவே, அந்தக் கோடாரி அவரின் தந்தத்தை உடைத்து விட்டது.

விநாயகர் மற்றும் அவரது சகோதரர் கார்த்திகேயனுக்கும் இடையே ஒரு நாள் வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்கள் இருவரில் சிறந்தவர் யார் என்று தீர்மானிக்க, பிரபஞ்சத்தினை முதலில் யார் ஒரு சுற்று சுற்றிவருகிறார்கள் என்ற ஒரு பந்தயத்தை மேற்கொண்டார்கள். போட்டி ஆரம்பித்தவுடன், கார்த்திகேயர் தனது மயில் வாகனத்தின் மீது ஏறி சவாரி செய்தார். அது அவருக்கு மிக எளிது. விநாயகர், சவாரி செய்வதற்கு வாகனம் ஏதும் இல்லாததால், அவரது தந்தை சிவனிடம் சென்று தனக்கு ஒரு வாகனத்தை வழங்கவும், ஒரு நியாயமான விளையாட்டை உருவாக்கவும் கேட்டார். உடனே சிவ பெருமான் ஒரு எலியை வாகனமாகக் கொடுத்தார். எலி மீதேறி இந்தப் பிரபஞ்சத்தை சுற்றி வந்து கார்த்திகேயனை வெற்றி கொள்வது கடினம் என்பதையறிந்த கணேசன் புத்திசாலித்தனமாக யோசித்தார் .பெற்றோரே ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பிரபஞ்சம் என்பதால் பெற்றோர்களை ஒரு சுற்று சுற்றி வந்தால் அது நிச்சயமாக பிரபஞ்சத்தை சுற்றி வந்ததாகவே அர்த்தம் என்பதை உணர்ந்து அவ்வாறே தன் எலி வாகனத்தோடு செய்து முடித்தார். தன் எலி வாகனத்தோடு அந்தப் போட்டியில் வெற்றியும் பெற்றார்.

வட மொழியில் கஜா என்றால் யானை என்று பொருள். அனன் என்பது தலை என்று பொருள் . இதனாலேயே அவர் கஜானன் என்றும் அழைக்கப்படுகிறார். கஜானன் என்றால் யானைத் தலையைக் கொண்ட கடவுள் என்று பொருள். இன்னொரு விளக்கம் என்னவென்றால், கா என்பது காடி என்றால், ஜா என்பது ஜனா என்ற வடமொழி வார்த்தையிலிருந்து வருகிறது. இது எல்லாம் அவரிடமிருந்து உருவாகிறது என்பதோடு, அவரை இறுதியாக இணைத்துக் கொள்ளவும் விதிக்கப்படுகிறது என்று பொருள்படுகிறது.

அவர் கணபதி என்றும் அழைக்கப்படுகிறார். வார்த்தை வகைக்கான மற்றொரு பெயர் “கண ” என்னும் சொல். அவர் வகைகளுக்கான கடவுளாவார். பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும், ஐந்து புத்திசாலித்தனங்களால் உணரப்படக்கூடியவை அனைத்தும் அந்த அர்த்தத்தின் அடிப்படையிலேயே வகைப்படுத்தப்படுகின்றன. இந்த அனைத்து வகைகளுக்குமான கடவுள்களுக்கெல்லாம் கடவுளானவன் கடவுள் கணேசன். அனைத்தும் அவரிடமிருந்தே தொடங்குவதாக அறியப்படுகிறது. மேலும், பார்வதி தம்பதியினரைக் காக்க அமர்த்தப்பட்ட காவலாளிகள் “கணங்களாக” அறியப்பட்டனர். எனினும், அவர்கள் சிவபெருமானுடன் போருக்குப் புறப்பட்டபோது, ​​வீட்டிற்கு காவலராக விநாயகர் இருந்தார். சிவபெருமான் இதை அறிந்த போது, ​​அவருக்கு கணபதி என்று பெயரிட்டார்.

இதுகுறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comment பகுதியில் பதிவிடுங்கள்.

தங்கள் நண்பர்களுக்கும் தெரியப்படுத்த Share செய்யுங்கள்.

1213-TamilSevai

 

காகிதக் கப்பல் செய்து தண்ணீரில் விடுவது என்றால் எல்லாக் குழந்தைகளுக்கும் பிடிக்கும். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 8 வயது ஓல்லி ஃபெர்குசன், 5 வயது ஹாரி சகோதரர்கள் இருவரும் சேர்ந்து ஒரு சிறிய கப்பலை உருவாக்கினார்கள். கடந்த ஆண்டு மே மாதம் இந்தக் கப்பல், கடலில் விடப்பட்டது. மழை, காற்று, புயல், பேரலை என்று எல்லாவற்றையும் சமாளித்து இன்றும் கடலில் அழகாகத் தன் பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இவர்களின் ஆர்வத்தைக் கண்டதும் பெற்றோருக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. உடனே தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து கொடுத்தார்கள். பெரியவர்கள் செய்தது போலவே அத்தனை நேர்த்தியாகக் கப்பல் தயாரானது. இதைக் கடலில் மிதக்க விட வேண்டும் என்று சகோதரர்கள் கோரிக்கை வைத்தவுடன், கப்பல் மிதப்பதற்குத் தேவையான எடையை அதிகப்படுத்தினார்கள். தகவல் தொடர்பு கருவியை இணைத்தனர். பீட்டர்ஹெட் கடல் பகுதியில் மிதக்க விட்டனர். தற்போது கப்பல் கயானா நாட்டுப் பகுதியில் தென் அமெரிக்கக் கண்டத்தில் மிதந்துகொண்டிருக்கிறது. ‘அட்வஞ்சர்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சிறிய கப்பல் அவ்வப்போது கரையைத் தொடுவதும் உண்டு. அப்போது கரையில் உள்ளவர்கள் ‘கரை ஒதுங்கினால் மீண்டும் கடலில் விட்டுவிடுங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கும் செய்தியைப் படித்துவிட்டு மீண்டும் கடலுக்குள் விட்டுவிடுகிறார்கள்.

“ஃபெர்குசனும் ஹாரியும் தாங்களாகவே கப்பல் செய்ய ஆரம்பித்தனர். குழந்தைகளின் ஆர்வத்தை நாங்கள் எப்போதும் தடை செய்ததே இல்லை. ஏதோ விளையாட்டுக்காகச் செய்கிறார்கள் என்று தான் நினைத்தோம். ஆனால் அவர்கள் மிக அழகான பொம்மைக் கப்பலை உருவாக்கிவிட்டார்கள். நண்பர்களும் அசந்து போனார்கள். இந்தக் கப்பலைக் கடலில் விட வேண்டும் என்று குழந்தைகள் கோரிக்கை வைத்தனர். கடலில் விட்டால் கப்பல் காணாமல் போய்விடும் என்று சொன்னோம். என்ன ஆனாலும் பரவாயில்லை, கப்பல் கடலில் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதற்குப் பிறகுதான் கப்பல் மிதந்து செல்வவதற்குத் தேவையான எடையை அதிகரித்தோம். ஜிபிஎஸ் கருவியைப் பொருத்தினோம். அதனால் கப்பல் எங்கே செல்கிறது என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்துக்கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பள்ளியிலிருந்து வந்தவுடன், கப்பல் குறித்த செய்திகளைத்தான் கேட்பார்கள். கப்பலுக்காக ஒரு ஃபேஸ்புக் பக்கத்தை ஆரம்பித்து, கப்பல் குறித்த தகவல்களை எழுதி வருகிறார்கள். உலகம் முழுவதும் ஏராளமானவர்கள் இந்தப் பக்கத்தைப் பின்தொடர்கிறார்கள். கப்பலைப் பார்ப்பவர்கள் படங்கள் எடுத்து அனுப்புகிறார்கள். ஒராண்டை நெருங்கும் நேரத்தில் கடந்த வாரம் கப்பல் தன் பயணத்தை நிறுத்திக்கொண்டு விட்டதாக நினைத்தோம். கப்பல் இடத்தைவிட்டு நகரவில்லை. தகவல் தொடர்பு கருவிக்கு அனுப்பிய சமிக்ஞைக்குப் பதில் கிடைக்கவில்லை. வெற்றிகரமாக 300 மைல்களைக் கடந்ததே பெரிய விஷயம் என்று நினைத்தோம். ஆனால் மீண்டும் கப்பல் நகர ஆரம்பித்துவிட்டது” என்கிறார் மாக்நெயில் ஃபெர்குசன்.

1212-TamilSevai

டாராஸ் ஷெலஸ்ட், என்பவர் ரஷ்யாவைச் சேர்ந்த விமானி.  இவர் பயணிகள் விமானத்தில்  5 ஆண்டு காலம் விமானியாக பணியாற்றியுள்ளார். ஆனால்  போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்வத்தின் காரணமாக சுயமாகவே விமானம் குறித்த அனைத்து விஷயங்களையும் கற்றிருக்கிறார். முறையாக எந்தப் பல்கலைக்கழகத்திலும் பட்டம் பெறவில்லை, பயிற்சி எடுக்கவில்லை. 1974-ம் ஆண்டு மாஸ்கோ அருகே பிறந்தார். சிறிய வயதிலேயே விமானியாக வேண்டும் என்று கனவு. விமானப் பயிற்சி நிலையங்களுக்கு நண்பர்களுடன் செல்வார். விமானம் தொடர்பான புத்தகங்கள், கட்டுரைகளைத் தேடித் தேடிப் படிப்பார். நண்பரின் அப்பா உதவியோடு சிறிய விமானங்களை ஓட்டிப் பார்க்கக்கூடிய வாய்ப்புகளைப் பெற்றார். எல்லோரும் பொழுதுபோக்காகத்தான் கற்றுக்கொள்வதாக நினைத்தனர். ஆனால் டாராஸ் மிகவும் முனைப்பாக ஒவ்வொன்றையும் கற்றுத் தேர்ந்தார்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடன் விமானப் பயிற்சிக் கல்லூரியில் சேருவதற்காகப் பலமுறை தேர்வுகளை எழுதினார். அவரால் வெற்றி பெற முடியவில்லை. வேறு வழியின்றி ஒரு வீடியோகேம் விளையாட்டு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். ஆனாலும் விமானி ஆகும் லட்சியத்தைக் கைவிடவில்லை. ஒரு போலிச் சான்றிதழைத் தயார் செய்தார். ஓராண்டுக்குப் பிறகு மிகச் சிறிய விமான நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்தார். அவர்கள் வைத்த தேர்வுகளில் தேறினார். பயிற்சி பெற்றார். இறுதியில் விமானியாகப் பணியில் சேர்ந்துவிட்டர். கடினமாக உழைத்தார். மேலும் மேலும் ஆர்வத்தைப் பெருக்கிக்கொண்டார். சிறந்த விமானி என்று பெயரெடுத்தார். பிறகு மிகப் பெரிய ரஷ்யன் ஏர்லைன் நிறுவனத்தில் விண்ணப்பித்தார். தகுதித் தேர்வுகளில் வெற்றி பெற்று, பயிற்சி பெற்று, விமானியாக வேலையில் அமர்ந்தார்.

அதுவரை எந்த நிறுவனமும் இவரது சான்றிதழ் போலி என்று கண்டுபிடிக்கவில்லை.  உலகம் முழுவதும் சுற்றி வந்திருக்கிறார். உக்ரைன் பகுதியிலிருந்து தொழில்நுட்ப மொழியில் சமிக்ஞைகள் வந்தன. அதற்கு ‘உக்ரைனுக்கு மகிமை’ என்று பதில் அனுப்பிவிட்டார் டாராஸ். அப்போதுதான் இவரது போலித்தனம் வெளிப்பட்டது. விமான நிறுவனத்துக்குப் புகார் சென்றது. விசாரணை ஆரம்பித்தது. “அவர் முறையாகப் படிக்கவில்லையே தவிர, மிகச் சிறந்த விமானியாக வேலை செய்தார். இதுவரை வேலை நிமித்தமாக சிறிய தவறு கூடச் செய்ததில்லை. ஆனால் விமானப் பணி என்பது எவ்வளவு முக்கியமானது. இதில் முறையாகப் பயிற்சி பெறாவிட்டால், தொழில்நுட்ப சமிக்ஞைகளைப் புரிந்து, அதற்கேற்ப செயல்பட முடியாது. எவ்வளவு பேரின் உயிர் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் இனி இவர் ரஷ்யாவில் விமானம்  ஓட்டக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.  டாரஸ், ‘என்னுடைய உண்மையான சான்றிதழ் தொலைந்துவிட்டது. அதனால் போலிச் சான்றிதழைப் பெற்றேன்’ என்றும் ரஷ்யாவுக்கு எதிரான கருத்துகளையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்.

இப்பதிவை உங்கள் நண்பர்களும் தெரிந்து கொள்ள share செய்யுங்கள்.

நன்றி

1211-TamilSevai

சீன பெண்களின் அழகுக்கு அரிசி கழுவின தண்ணி தான் காரணம்

அழகு என்றாலே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது சீனப் பெண்கள் தான். அவர்களின் மாசு மருவற்ற முகமும், சரியான தோல் நிறமும் அவர்களுக்கு கூடுதல் அழகு சேர்க்கிறது. அவர்கள் எந்த அழகு சாதனப் பொருட்களும் அணியாமலே அழகாக காட்சி அளிக்கக் கூடியவர்கள். வயதான பெண்களிலிருந்து இளம் பெண்கள் வரை ஓரே மாதிரியான சரும நிறத்தை பெற்றிருப்பார்கள்.

சீனப் பெண்கள் அழகாக இருக்க காரணமான பண்டைய சீன அழகு ரகசியம் இதோ:-

சீனப் பெண்களின் அழகில் அரிசி தண்ணீர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அரிசி தண்ணீர் நம் சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமையை போக்கி சரும நிறத்தை மேம்படுத்துகிறது. மேலும் சருமம் பட்டு போன்று மென்மையாக இருக்கவும் உதவுகிறது. அரிசி தண்ணீர் சரும சுருக்கங்கள் மற்றும் சருமம் வயதாகுவதை தடுக்கிறது. மேலும் சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் பாதிப்பை சரி செய்கிறது.

அரிசியை கொஞ்சம் நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.  அந்த தண்ணீர் அப்படியே பால் மாதிரி மாறும் வரை ஊற வைக்க வேண்டும். இப்பொழுது இந்த தண்ணீரில் பஞ்சினை நனைத்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவ வேண்டும். பிறகு மீதமுள்ள தண்ணீரை பிரிட்ஜில் வைத்து பிறகு கூட நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

சீனப் பெண்கள் ரெம்ப காலமாக தங்கள் முகத்திற்கு பாசிப்பயிறு மாஸ்க் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த மாஸ்க் நூற்றாண்டு காலமாக சீனப் பெண்களின் பியூட்டி பராமரிப்பில் சிறந்து விளங்குகிறது. முகப்பருக்களை போக்கு வதில் இந்த பாசிப்பயிறு மாஸ்க் பெரிதும் உதவுகிறது.

இந்த மாஸ்க்கை தயாரிப்பது மிகவும் எளிது. சிறிதளவு பாசிப்பயிரை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை அப்படியே முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் தடவி வையுங்கள். இதை அரை மணி நேரம் அப்படியே ஊற வைக்கவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அது பருக்களை போக்கி நல்ல பொலிவான சருமத்தை தருகிறது.

உங்கள் சருமம் ஆரோக்கியமாக இருக்க மூலிகைகளும் சிறந்த பங்காற்றுகிறது. சீனப் பெண்கள் அதிகளவு க்ரீன் டீ எடுத்து கொள்வார்கள். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பொருள் போன்றவை நம் சரும ஆரோக்கியத்தை காக்கிறது. அதுமட்டுமல்லாமல் க்ரீன் டீ சருமம் சீக்கிரம் வயதாவதை தடுக்கிறது. மேலும் உடலின் மெட்டபாலிசம் வேகத்தை அதிகரித்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

சீன பெண்களின் சருமழகை மெறுகேற்றுவதில் மசாஜ் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. முகத்திற்கும் உடம்பிற்கும் இது நல்ல இரத்த ஓட்டத்தை கொடுக்கிறது. இதனால் முகத்தில் உள்ள அதிகப்படியான சதைகள் குறைந்து முகம் சிக்கென்று காணப்படும். உடம்பு முழுவதும் மசாஜ் செய்யும் போது ஒட்டுமொத்த மெட்டா பாலிசமும் சுறுசுறுப்பாக செயல்படுகிறது.

புதினா இலை முகத்தின் அழகை மெருகேற்றும் ஒரு மேஜிக் பொருளாகும். இந்த புதினா உங்கள் சருமத்திற்கு நல்ல நிறத்தை கொடுக்கிறது.

புதினா இலைகளை கொஞ்சம் தண்ணீர் விட்டு அரைத்து கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி வையுங்கள். இந்த ரெசிபியை கோடை காலம் செய்து வந்தால் நல்ல குளிர் நிலையை பெறுவீர்கள்.

சீனப் பெண்கள் முகத்திற்கு மஞ்சளை பயன்படுத்துகின்றனர். மஞ்சளை அவர்கள் பேஸ் மாஸ்க்காக பயன்படுத்தி வருவதால் சுருக்கங்கள் இல்லாத முகத்தை பெற முடியும். சருமத்தில் உள்ள நிறத்திட்டுகளுக்கு மஞ்சள் ஒரு சிறந்த மருந்தாகும்.

சீனப் பெண்களின் அழகான சதைப்பற்றுள்ள மென்மையான முகத்திற்கு காரணம் அவர்கள் முட்டை மாஸ்க் பயன்படுத்துகின்றனர். முட்டையின் வெள்ளை கருவை கொண்டு தயாரிக்கப்படும் இந்த மாஸ்க் பொலிவான மென்மையான முகத்தை தருகிறது. இதற்கு காரணம் வெள்ளை கருவில் உள்ள அஸ்ட்ரிஜெண்ட் என்ற பொருள் உங்களுக்கு சிக்கென்ற முகழகை கொடுக்கிறது.

சரும பராமரிப்பு டிப்ஸ்கள்:-

நீங்கள் எந்த ஒரு பொருளையும் முகத்திற்கு பயன்படுத்துவதற்கு முன்னர் பேஜ் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. இதன் மூலம் எதாவது அழற்சி ஏற்படுகிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். முகத்திற்கு அடிக்கடி மசாஜ், இயற்கை பேசியல் செய்யுங்கள். நல்ல ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் சருமத்திற்கு மிகவு‌ம் முக்கியம். மஸ்ரூம், சோயா பீன்ஸ் போன்றவற்றை சேர்த்து கொள்ளுங்கள். பொலிவான சருமம் பெற நச்சுக்களை வெளியேற்றும் ஜூஸ் வகைகளை பருகலாம். உடற்பயிற்சி மேற்கொண்டு உடம்பை கச்சிதமாக வைத்துக் கொள்ளுங்கள்.  இதைப் பின்பற்றினால் ஆரோக்கியமான அழகை பெறலாம். நீண்ட காலம் இளமையுடன் ஜொலிக்கலாம்.

இப்பதிவை தங்கள் நண்பர்களுக்கும் பகிர்வு செய்தால் அவர்களும் பயன்பெறுவார்கள்.

நன்றி.

1209-TamilSevai

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

விநாயகர் சதுர்த்தி பூஜையில் வைக்க வேண்டியவைகள்

நீங்கள் நன்கு உற்று கவனித்தால் பிள்ளையாருக்கு படைக்கப்படும் பொருள்கள் மிகவும் எளிமையானதாகவே இருக்கும். பெரிதாக நீங்கள் சிரமப்படவே தேவையிருக்காது.

வீட்டுப் பூஜை பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தி அன்று எல்லாருடைய வீடுகளிலும் விநாயகர் உருவ சிலை தங்களால் முடிந்ததை வைத்து வழிபடுவோம். அது வெறுமனே களிமண் சிலையாகவோ, அதுவும் இயலாதவர்கள் வெறுமனே வீட்டில் உள்ள மஞ்சள் பொடியில் கைகளால் பிள்ளையார் பிடித்து வைத்தோ வழிபடுவது உண்டு.

அலங்காரம் அப்படி ஒரு பிள்ளையாருக்கு சின்ன சின்ன கலர் பொம்மை குடைகள் வாங்கி வந்து, எருக்கம்பூ அணிவித்து அருகம்புல் சாத்தி, செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்பது பிள்ளையாருக்கு வைக்கும் படையலைத் தான்.

கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என அத்தனையும் வேத்தியமாக வைக்கப்படும். அதேபோல் பழங்களில் ஆப்பிள்ஈ திராட்சைஈ நாவல் பழம், முக்கியமாக விளாம்பழம் கட்டாயம் இருக்கும். வாழைப்பழம், தேங்காய் வழக்கம் போல் வைக்கப்படும்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன். துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா என்று பாடி வழிபடலாம்.

மறுநாள் புனர்பூஜை என்று அழைக்கப்படுகிற சிறிய அளவிலான பூஜையை செய்து, நல்ல நேரம் பார்த்து பிள்ளையார் சிலையை கிணற்றிலோ குளம், ஆறு, கடல் எதுவாக இருந்தாலும் அதில் போட்டு கரைத்துவிடலாம். இப்படித்தான் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆடம்பரம் என்பது அவரவர் பொருளாதார நிலையைப் பொருத்தது.

21 வகை பச்சிலைகள் விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு இஷ்டமான 21 வகை யான பச்சிலைகளை வைத்து பூஜை செய்தால் இன்னும் விசேஷம்.

அந்த 21 வகை இலைகள் மற்றும் பலன்கள்:

 1. முல்லை இலை – வீட்டில்அறம் வளரும்.
 2. கரிசலாங்கண்ணி – வாழ்க்கைக்குத் தேவையான பொன்னும் பொருளும் வந்து சேரும்.
 3. வில்வ இலை – இன்பமும் நீங்கள் மனதில் விருமு்பியவை அனைத்தும் கிடைக்கும்.
 4. அருகம்புல் – அனைத்துவிதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
 5. இலந்தை இலை – கல்வியில் பிள்ளைகளுக்கு மேன்மை உண்டாகும்.
 6. ஊமத்தை இலை – தாராள மனம் பெருகும்
 7. வன்னி இலை – இந்த ஜென்மத்திலும் சொர்க்கத்திலும் கூட மகிழ்ச்சி உண்டாகும்.
 8. நாயுருவி இலை – முகத்தில் பொலிவும் உங்களுடைய உடல் உள்ள அழகும் கூடும்.
 9. கண்டங்கத்தரி இலை – மன தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.
 10. அரளி இலை – எடுக்கின்ற எல்லா முயற்சியும் கைகூடி வரும்.
 11. எருக்கம் இலை – கருவில் உண்டாகும் குழந்தைக்கு பாதுகாப்பு தரும்.
 12. மருத இலைகள் – மகப்பேறு செல்வம் கிடைக்கும்.
 13. விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணறிவு பெருகும்.
 14. மாதுளை இலை – பெரும் புகழும் நல்ல பெயரும் கிடைக்கும்.
 15. தேவதாரு இலை – எதையும் தாங்குகின்ற மன தைரியம் கிடைக்கும்.
 16. மரிக்கொழுந்து இலை – இல்லற சுகம் அதிகமாகக் கிடைக்கப்பெறும்.
 17. அரச இலை – உயர் பதவியும் அந்த பதவியின் மூலம் வெற்றியும் கிடைக்கும்.
 18. ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை பாக்கியம் கிடைக்கும்.
 19. தாழம்பூ இலை – செல்வச் செழிப்பு உண்டாகும்.
 20. அகத்தி இலை – கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
 21. அருகம்புல் மாலை அர்ச்சனை இந்த எல்லாவற்றையும் விடவும் புனிதமாகவும் விசேஷமானதாகவும் இருக்கும்.
குறிப்பு:-
தங்கள் கருத்தை இங்கே பதிவிடுங்கள்.  நண்பர்களுக்கும் பகிர்வு செய்யுங்கள். தங்கள் வருகைக்கு நன்றி.

1208-TamilSevai

1 2 3 26
ஒலிபரப்பு
 • 123,038
 • 35,890