நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

OliKalanjiyam

Collections

Islam Songs

இசுலாம் மதப் பாடல்கள் அணிவகுத்துள்ளன

Hits: 14

SivanSongs

நற்றிணை நேயர்களின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன் பாடல்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ஆன்மீகம் இருக்கும் இடத்தில் அன்பும் அமைதியும் நிறைந்திருக்கும். ஆன்மீகத்தில் மகிழ்ந்திருப்போம். பேரானந்தத்தில் திளைத்திருப்போம். தென்னாடுடைய சிவனே போற்றி..! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..!

நமசிவாய

சிவஸ்துதி

அருணாச்சலம்

சிவம்

சிவமந்திரம்

பிரதோஷ சிவன் பாடல்கள்

தீப தரிசனம்

சிவன் பாடல்கள்

Hits: 430

ஒரு நிமிட யோசனை

ஒரு நிமிட யோசனை


அனைத்து உள்ளங்களுக்கும் அன்பு வணக்கம். பள்ளியில் நடக்கும் பல பேச்சுப்போட்டிகளில் நிறைய பரிசுகளை வாங்கியிருக்கிறேன். குரல்வளம் சிறப்பாக இருப்பதாக பலரும் அவ்வப்பொழுது பாராட்டுவார்கள்.  பழமொழிகள், ஆன்றோர் சிந்தனைகள், தத்துவ முத்துக்கள் போன்ற மனித வாழ்க்கைக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய கருத்துக்களை நற்றிணை நேயர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆவலில் தினந்தோறும் ஒரு கருத்தை ஒலிவடிவில் வழங்கிவருகிறேன். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அயல்நாடுகளிலிருந்தும் வரும் பாராட்டுக்கள் என்னை மேலும் உற்சாகமூட்டுகிறது. காலையில் என்குரலைக் கேட்பது மிகவும் மனதுக்கு இதமாக இருப்பதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். இத்தொகுப்பு உங்கள் பார்வைக்காக இங்கு வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள நிறைகுறைகளை தெரிவித்தால் எனது வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். எனவே, இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை இங்குள்ள பின்னூட்டப் பகுதியில் (Comments)  பதிவிடுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் பகிர்வு செய்யுங்கள்.

என்றும் நன்றியுடன்
ச. அனுகீர்த்தனா
திருச்சி

 

Hits: 226

பாட்டோடுதான் நான் பேசுவேன்

பாட்டோடுதான் நான் பேசுவேன்

-கோவை சூரியகாந்தன்


நற்றிணை நேயர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். கடந்த 2017-ம் ஆண்டில் நற்றிணை இணையதளத்தின் சேவையினை நான் கேள்விப்பட்டேன். அதன்பிறகே இதில் நிகழ்ச்சிகளைத் தருவதற்கும் முன்வந்தேன். இலக்கியச் சிறகு என்ற தலைப்பிலே ஒவ்வொரு நாளும் நான் வழங்கிய சிற்றுரைகளுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்றளவும் பாட்டோடுதான் நான் பேசுவேன் எனும் தலைப்பில் உங்கள் இதயங்களிலே தென்றலாக வீசிக்கொண்டிருக்கிறேன்.

எனது கல்வித் தகுதி. எம்ஏ, எம்ஏ, பிஎட், எம்ஃபில், பிஎச்டி. அடிப்படையில் நான் படைப்புக் கலைஞன். கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள் என எழுதி கடந்த 45 வருடங்களாக தமிழ்மொழியின் தற்கால இலக்கியத் துறையில் பரிமளித்து வருகின்றேன்.  இதுவரை எனது 35 நூல்கள் வெளிவந்துள்ளன. தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக் கழகங்களிலும் கல்லூரிகளிலும் அவைகள் பாடநூல்களாக அமைந்து சிறப்புப் பெற்றுள்ளன. ஆங்கிலம் இந்தி மலையாளம் கன்னடம் தெலுங்கு மராட்டியம் ஆகிய மொழிகளில் எனது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. அதிக அளவிலே எம்ஃபில் பிஎச்டி ஆய்வாளர்களுக்கு மையப்பொருளாய் எனது படைப்புகள் விளங்கிவருகின்றன. சாதனைகள் புரிந்த பிறமாநில எழுத்தாளர்களோடும் நோபல்பரிசு பெற்ற மேலைநாட்டு எழுத்தாளர்களோடும் என்னையும் எனது படைப்புக்களையும் ஒப்பிட்டு பல்கலைக் கழகங்களில் ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இதுவரை அமரர் அகிலன் நினைவு நாவல் விருது, இலக்கியச் சிந்தனை விருது, கோவை பாரதியார் பல்கலைக் கழகம் வழங்கிய தமிழறிஞர் விருது உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தரமான இலக்கிய விருதுகளை நான் பெற்றிருக்கிறேன். பத்திரிக்கைத் துறையிலும் வானொலித் துறையிலும் பணியாற்றிய நான் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி முடித்து  ஓய்வுபெற்ற நிலையில் இருக்கிறேன். இப்போதும் தொடர்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட்டு இலக்கியம் படைக்கும் மக்கள் எழுத்தாளனாக இயங்கி வருகிறேன். நான் எழுதிய பக்திப் பாடல்களும் வானொலிக்கு எழுதிய மெல்லிசைப் பாடல்களும் மிகுந்த வரவேற்பைப் பெற்று விளங்குகின்றன. சத்தியம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையே எனது படைப்புக்களின் உயிர்மூச்சு. தமிழின் சிறப்பை இந்திய தேசத்தையும் தாண்டி உலக இலக்கியத்தில் பதிப்பதற்காக நாளும் உழைத்துக் கொண்டிருப்பவர்களில் நானும் ஒருவன்.

நான் நற்றிணையில் வழங்கி வந்த இலக்கியச் சிறகு என்ற பகுதியைச் சுவைக்க இங்கே சொடுக்குங்கள்: இலக்கியச் சிறகு

தென்றல் இணைய இதழில் என்னைப்பற்றி வந்த கட்டுரையின் தொகுப்பை வாசிக்க இந்த இணைப்பை சொடுக்குங்கள்: “தென்றல்”

என்றும் உங்கள் நண்பன்
சூரியகாந்தன்

11/9 மாரப்ப கவுண்டர் வீதி, ராமசெட்டிப் பாளையம்,
பேரூர் (வழி), கோயம்புத்தூர்641010. அலைபேசி 8300528343
E-mail: suriyakanthan.rainbow@gmail.com

 

Hits: 1182

நித்தம் ஒரு முத்து

நித்தம் ஒரு முத்து -தொகுப்பு

-அரிமழம் செ.ஞானப்பிரியன்


நற்றிணை நேயர்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள். தமிழின் சிறந்த புத்தகங்களின் ஒரு சில பக்கங்களை தினந்தோறும் வாசித்து அளிக்கிறேன். துவக்கத்தில் சோதனை முயற்சியாக துவஙகினேன். நேயர்களின் ஏகோபித்த வரவேற்பால் எனது சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பொழுதுபோக்கு சாதனங்கள் மலிந்துகிடக்கும் இன்றைய சூழலில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே மிகவும் குறைந்துவிட்டது. ஆனால் புத்தகங்களில்தான் கோடிக்கணக்கான கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன. அறிவுக் கருவூலங்களாக திகழும் புத்தகங்களை அனைவரையும் வாசிக்கச் செய்ய வேண்டும் என்ற ஆதங்கத்தின் ஒரு சிறு முயற்சிதான் இந்த நித்தம் ஒரு முத்து நிகழ்ச்சி.

புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை தூண்டும் விதமாக எனது வாசிப்பு இருப்பதாக பெரும்பாலான நேயர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.  நற்றிணை நேயர்களால் பெரிதும் வரவேற்புப் பெற்ற இப்பதிவுகள் உங்கள் கவனத்தையும் ஈர்க்கும் என்று நினைக்கிறேன். தினந்தோறும் சுமார் ஐந்து நிமிடங்கள் வாசித்து அளிக்கப்படும் இப்பகுதியின் ஒலித்தொகுப்பு இங்கே அடுக்கி வைக்கப் பட்டுள்ளது. இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comment பகுதியில் பதிவிடுங்கள். தங்கள் நண்பர்களும் பயன்பெற விரும்பினால் சமூக ஊடகங்களில் Share செய்யுங்கள்.

என்றும் அன்புடன்
செ.ஞானப்பிரியன், அரிமழம்

Hits: 255

தினம் ஒரு துளி

தினம் ஒரு துளி

வீட்டு உபயோகக் குறிப்புகள், எளிய மருத்துவக் குறிப்புகள் போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல பயனுள்ள தகவல்களை ரத்தினச் சுருக்கமாக தெளிவாக விளக்குகிறார் சென்னை அலமேலு. தினம் ஒரு துளி எனும் தலைப்பில் தினந்தோறும் நற்றிணையில் ஒலி வடிவில் அளித்து வரும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு இங்கு வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்குமான பல குறிப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை இங்குள்ள comments பகுதியில் பதிவிடுங்கள். இக்குறிப்புகளை பலரும் கேட்டுப் பயன்பெற விரும்பினால் சமூக ஊடகங்களில் பகிர்வு செய்யுங்கள்.

Hits: 1325

சமையல் சமையல்

சமையல் சமையல்

ஒவ்வொரு நாளும் நற்றிணையில் நான் வழங்கிக் கொண்டிருக்கும் சமையல் சமையல் என்ற இப்பகுதியை பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், குழந்தைகள் என அனைவரும் விரும்பிக் கேட்கிறார்கள்.  இப்பகுதி நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்ற நிகழ்ச்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.  சென்னையில் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கிலத் துறை ஆசிரியையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கறேன். பார்வைமாற்றுத் திறனாளியாக இருந்த போதிலும் என்னாலும் இப்படி ஒரு நிகழ்ச்சியை வழங்க முடியும் என்பதை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு இந்நிகழ்ச்சியை திறம்பட வழங்கி வருகிறேன். தெற்கு மற்றும் வடமாநில சமையல் குறிப்புகளும் இங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. நேயர்கள் கேட்டுப் பயன்பெறுங்கள். இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள comments பகுதியில் பதிவு செய்யுங்கள். தங்கள் நண்பர்களும் இதைக் கேட்டுப் பயன்பெற  பகிர்வு செய்யுங்கள்.

என்றும் அன்புடன்
அலமேலு, சென்னை

Hits: 735

நாளும் ஒரு விதை

நாளும் ஒரு விதை

விருதுநகர் VHN செந்திகுமார நாடார் கல்லூரியில் வேதியியல் துறைப் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் வகுப்பறையில் பாடம் நடத்தும் பொழுது சிறுசிறு கதைகளைக் கூறுவது வழக்கம். இக்கதைகள் மாணவர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்புப் பெற்றன. வகுப்பறையை உற்சாகப்படுத்திய இக்கதைகள் நேயர்களையும் உற்சாகப்படுத்தும் என்ற நோக்கில் என் தேடல்களை அதிகப்படுத்தி நற்றிணை நேயர்களுக்கு தினந்தோறும் வழங்கினேன். ஒவ்வொரு நாளும் ஒரு புது எண்ணத்தை நேயர்கள் மனதில் விதைக்க வேண்டும் என்பதற்காக நாளும் ஒரு விதை என்ற தலைப்பைச் சூட்டினேன். இதில் ஏதேனும் ஒரு விதையாவது உங்கள் எண்ணத்தில் விழுந்து முளைத்தால் மிகவும் மகிழ்வேன். என் குரலைப் பெரிதும் வரவேற்று அவ்வப்பொழுது ஊக்குவித்த அனைத்து நேயர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாட்ஸப் வழியாக வழங்கிய எனது பதிவுகளைத் தொகுத்து நற்றிணை இணைய தளத்தில் நிரந்தரப் பதிவாக்கிய நற்றிணைக் குழுமத்திற்கு எனது மனப்பூர்வமான நன்றிகள். இங்குள்ள பதிவுகளைச் சுவையுங்கள். உங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடுங்கள். தங்கள் நண்பர்களுக்கும்  Share  செய்யுங்கள். நன்றி.

 

Hits: 1358

கதை சொல்லும் நீதி

கதை சொல்லும் நீதி -முக்கனி


அன்பு நேயர்களுக்கு இனிய வணக்கம். நான் திட்டக்குடி முக்கனி. வங்கிப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் வாட்ஸப் வழியாக வந்து கொண்டிருந்த நற்றிணைப் பதிவுகளை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தேன். நற்றிணையில் வெளிவரும் நித்தம் ஒரு முத்து என்ற நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி. பலநேரங்களில் எனக்கு ஆறுதல்களையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய பங்கு அந்த நிகழ்ச்சிக்கு உண்டு. அந்த நிகழ்ச்சியைப் பாராட்டி நற்றிணைக்கு கருத்து தெரிவித்தபோது என்னையும் நிகழ்ச்சி வழங்குமாறு ஆலோசனை கொடுத்தார்கள்.

சிறுகதை சொல்லிப் பார்க்கலாம் என்று துவங்கினேன். ஆனால் எதிர்பார்த்ததைவிட நேயர்களிடையே பெரிய வரவேற்பு இருந்தது. கதையைவிட நான் கதைசொல்லும் விதம் அனைவரையும் கவரும் வகையில் இருப்பதாக பலரும் கருத்துத் தெரிவித்தார்கள். பார்வை மாற்றுத் திறனாளியான எனக்கு புத்தகங்களிலிருந்து கதைகள் சேகரிப்பது சற்று கடினமாக இருக்கவே. எனது கற்பனைக் குதிரையை தட்டிவிட்டேன். அவை அள்ளிக் கொண்டுவந்த கருக்களை மையப்படுத்தி கதைகளை வடிவமைத்தேன். எனக்குள் ஒளிந்திருந்த திறமையை எனக்கே தெரியப்படுத்திய நற்றிணைக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு திங்கள் கிழமைகளிலும் நான் வழங்கிய கதைகளின் ஒலிவடிவம் இங்கே வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. இதுகுறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comments பகுதியில் பதிவிடுங்கள். பிற சமூக ஊடகங்களுக்கும் Share செய்யுங்கள்.

என்றும் அன்புடன்
முக்கனி, திட்டக்குடி

Hits: 1582

  • 185,335
  • 63,454
நேயர் கருத்து