(27)

உங்களைப்பற்றி

குறைகூற

தங்கள்

நேரத்தைச்

செலவு செய்யும்

அந்தப்

புண்ணியவான்களை

தூக்கி

எறியுங்கள்…!

ஏதோ

ஒருவகையில்

உங்களை

நெஞ்சில்

சுமக்கும்

அந்த

ஜென்மங்களுக்கு

ஒரே ஒருமுறை

நன்றி

கூறுங்கள்…!

-நற்றிணை சசிகுமார்7

(25)

நேற்றைய
மாணவர்கள்தான்
இன்றைய
ஆசிரியர்கள்…

முன்னால்
தோல்வியாளர்களே
நாளைய
வெற்றியாளர்கள்…

இன்று
போராடுபவர்களே
எதிர்கால
சாதனையாளர்கள்…

அனுபவத்தில்
கற்பவர்களே
வெற்றிப் படியை
எட்டிப் பிடிக்கிறார்கள்..

கவனமின்றி
இருப்போரெல்லாம்
காணாமல்
போகிறார்கள்…!

நீங்கள்…?

-நற்றிணை சசிகுமார்

-0-0-0-0-0-0-

நாம் ஒவ்வொருவரின்
அனுபவங்கள்
மட்டுமே
நமது வாழ்க்கையை
சிறப்பாகவும்,
மகிழ்ச்சியாகவும்
வாழ கற்றுக்
கொடுக்கிறது.

அனுபவமே
சிறந்த ஆசான்.

-மேலகண்டமங்கலம் செல்வம்

-0-0-0-0-0-0-

கடந்து வந்த 

பாதையில் 

பெற்றுக் கொண்டது

அனுபவம்…

பெற்றுக் கொண்ட

அனுபவமே 

கற்றுத் தந்தது

பாடம்…

பாடம் 

கற்றுப் பழகியதால்

வாழ்வில் 

புத்தம்புது வசந்தம்!

-விழுப்புரம், மேகலை மகள்,

(24)

திருத்தி

எழுதிய

வாழ்க்கைப்

புத்தகங்கள்

மட்டுமே

சரித்திரங்கள்

படைத்திருக்கின்றன..!

தயங்காமல்

திருத்திடு..,

சரித்திரம்

படைத்திடு…!

-நற்றிணை சசிகுமார்

-0-0-0-0-0-0-0-

உன் வாழ்க்கை

 புத்தகத்திற்கு

நீயே ஆசிரியர்

அதில் ஏற்படும்

பிழைகளை

மாற்றவோ,

திருத்தவோ

ஒரு போதும்

தயக்கம்

கொள்ளதே.

-திருமங்கலம், ஜெயகுமார்.

(23)

இயற்கையை

வணங்குங்கள்…

உண்மையாக

உழையுங்கள்…

எதிர்காலத்திற்காக

இப்பொழுதே

முயலுங்கள்…

வெற்றி

உங்கள்

காலடியில்

கிடப்பதைப்

பாருங்கள்..!

-Natrinai Sasikumar

__________

நற்றிணை நேயர்கள்:

வளமான எதிர்காலத்தை உருவாக்க முயற்சித்துக் கொண்டே இருங்கள்!

மற்றவர்கள் உங்களை விமர்சித்தாலும் கடவுள் மீது நம்பிக்கை வைத்து நேர்மையுடன் உழைத்துக் கொண்டே இருங்கள்!

உங்களை மதிப்பீடு செய்ய கடவுள் இருக்கிறார்!

ஈரோடு எஸ் செந்தில்குமார்.

______

நாம் கடைபிடிக்க வேண்டிய மூன்று விஷயங்கள்.

ஒன்று முயற்சி. இரண்டாவதாக உண்மை.
மூன்றாவதாக நம்பிக்கை.

முயற்சி எதிர்காலத்திற்கான ஊன்றுகோல்.
உண்மை உழைப்பிற்கான திறவுகோல்.
நம்பிக்கை கடவுளை அடைவதற்கான வழி.

இவை மூன்றும் வெற்றிக்கான வித்துக்கள்.

-திருமங்கலம், ஜெயகுமார்

________

முயற்சி

-எதிர்காலத்தின் உண்மை!

உண்மை

-முக்காலத்தின் வழிபாடு!

நம்பிக்கை

– அன்பின் சிகரம்!

-மதுரை, சுதா

(22)

வெற்றி

நிரந்தரமில்லை

தோல்வி மட்டுமே

முடிவில்லை

முயற்சிக்கு

எல்லையில்லை

இலக்கைத்

தொடும்வரை

ஓய்வில்லை

சரித்திரம்

படைக்க

இதைத்தவிர

வேறு

மந்திரமில்லை…

-Natrinai Sasikumar

(21)

மௌனமாயிருங்கள்

பிரச்சினைகளைத்

தவிர்த்து விடலாம்…

மனம்விட்டுப் பேசுங்கள்

சில பிரச்சினைகளைத்

தீர்த்துவிடலாம்…

புன்னகையோடு

இருங்கள்

பிரச்சினையே இல்லாத

வாழ்வைப் பெறலாம்…!

இனிமேலாவது

புன்னகைப்பீரா..?

-Natrinai Sasikumar

(20)

நாணயங்கள் போல்

பணம்

ஒலி

எழுப்புவதில்லை…!

 

மூடர்கள்போல்

அறிவாளிகள்

ஆர்ப்பரிப்பதில்லை..!

 

ஒலி எழுப்பி

உங்கள்

தகுதியை

குறைத்துக்

கொள்ளாதீர்..!

-Natrinai Sasikumar

(19)

வீட்டுக்காக

நாட்டையே

சூறையாடும்

நல்லவர்கள்

மத்தியில்..,

 

நாட்டுக்காக

வீட்டை துறந்த

சிப்பாய்களின்

உயிருக்காக

 

ஒவ்வொரு நாளும்

பிரார்த்தனை

செய்வோம்..!

-Natrinai Sasikumar

(18)

எல்லோரையும்போல்

இருப்பதற்கு

எல்லோருமே

இருக்கிறார்கள்…

 

எல்லோரையும்விட

தனித்து நின்று

ஜெயிக்க

நீ

ஒருவன் மட்டுமே

இருக்கிறாய்..!

-Natrinai Sasikumar

(17)

வெறும்

கதை பேசுவதற்கும்

கை குலுக்குவதற்கும்

மட்டுமல்ல

நம் நட்பு

என்பதை

அறிவாயா..?

என் இதயத்துடிப்பை

மொழிபெயர்த்தால்

அதில்

உன் பெயர்தான்

ஒலித்துக்கொண்டிருக்கும்

என்பதை

நீ உணர்வாயா…

என்

நட்பே…?

-Natrinai Sasikumar

(16)

முயற்சி

சிலநேரங்களில்

தோல்வியைத்

தொடலாம்…

முயற்சியே

இல்லாவிட்டால்

வாழ்க்கையே

தோல்வியில்

முடிந்துவிடும்..

விடாமுயற்சி

வெற்றியில்

மட்டுமே

முடியும்…!

-Natrinai Sasikumar

(15)

உயரத்தால்

அல்ல

ஒளியால்

மட்டுமே

விளக்கின்

தன்மை

அறியப்படுகிறது…!

உன்

நிலைமையால்

அல்ல

உன்

குணத்தால்

மட்டுமே

உலகத்தாரால்

போற்றப்படுகிறாய்..!

-Natrinai Sasikumar

(14)

நாவினாற்

சுட்ட புண்

இதயத்தை

நொறுக்கிவிடும்…

நல்வார்த்தை

ஒவ்வொன்றும்

அதிசயங்கள்

பலபுரியும்…

நல்லதே

நினைத்திடுங்கள்,

நற்சொற்களை

உதிர்த்திடுங்கள்…!

-Natrinai Sasikumar

(13)

நல்லவனாக

இருப்பவனைவிட,

நல்ல

செயல்களை

செய்பவனையே

உலகம்

கைகூப்பி

தொழுகிறது…!

நீங்கள்

எந்த

வகை?

-Natrinai Sasikumar

(12)

வீறுகொண்டு

எழுந்திரு…

 உணர்வுகளில்

உரமேற்று…

 பார்வையை

விசாலமாக்கு..

இதோ

உனக்கான

வாய்ப்புகள்

உன்னைத்தேடி

வருவதைப்

பார்…!

-Natrinai Sasikumar

(11)

உன்

முகத்திலுள்ள

அசிங்கத்தைத்

துடைக்காமல்..,

அடுத்தவர்

முகத்தைப்

பார்த்து

அவதூறு

பேசாதே..!

-Natrinai Sasikumar

(10)

நான்

வித்தியாசமானவன்

என்று

நகைக்கும்

அவர்கள்

அனைவரும்,

ஒரேமாதிரியான

முட்டாள்கள்

என்பது

உங்களுக்குத்

தெரியுமா…?

-Natrinai Sasikumar

(09)

பயத்தை

எதிர்த்து

போராடுங்கள்…

பயத்தை

துரத்தி

வென்றிடுங்கள்…

பயத்தை

நொறுக்கித்

தகர்த்திடுங்கள்…

தானாக

வளரும்

தன்னம்பிக்கையை

ஒவ்வொரு

செயலிலும்

உ ணர்ந்திடுங்கள்….!

-Natrinai Sasikumar

(08)

தேவையென்று

கேட்பதெல்லாம்

இறைவன்

கொடுப்பதில்லை…

கிடைத்த பொருளை

நேசிப்பவனுக்கும்,

கிடைத்ததற்காக

நன்றி

செலுத்துவனுக்குமே

இறைவன்

மீண்டும்

மீண்டும்

கொடுக்கிறான்..!

-Natrinai Sasikumar

(07)

நீங்கள்

100%

தன்னம்பிக்கை

உடையவரா?

வியக்க

வைக்கும்

பல

அதிசயச்

செயல்கள்

உங்களால்

மட்டுமே

சாத்தியமாகும்…!

-Natrinai Sasikumar

(06)

அதிகம்

சம்பாதிப்பவனைவிட,

அதிகம்

செலவு செய்பவனைவிட..,

அதிகம்

சேமிப்பவனைவிட..,

அதிகளவில்

தேவைகளைக்

குறைத்துக்

கொள்கிறவனே

உண்மையான

பணக்காரன்.

-Natrinai Sasikumar

(05)

அதிபுத்திசாலியா?

எண்ணங்களைப் பற்றி

பேசுங்கள்…

புத்திசாலியா?

நிகழ்வுகளைப் பற்றி

பேசுங்கள்…

புத்தியற்றவரா?

அடுத்தவரைப்பற்றி

பேசுங்கள்…

-Natrinai Sasikumar

(04)

வாழ்க்கைப்

பயணத்தில்,

பின்நோக்கிப்

பாருங்கள்

சோகத்தில்

மூழ்குங்கள்…

முன்னோக்கிச்

செல்லுங்கள்,

வாய்ப்புகளை

அள்ளுங்கள்…!

இப்போதைய

நொடிகளை

சந்தோஷமாய்

கொண்டாடுங்கள்…

-Natrinai Sasikumar

(03)

நம்பிக்கைக்கு

உரியவர்களின்

மௌனம்கூட

ஆறுதல் கூறும்…!

நம்பிக்கைக்கு

அப்பாற்பட்டவரின்

ஒவ்வொரு

வார்த்தையும்

காயப்படுத்தும்…

உறவுகளின்

ஆணிவேரே

நம்பிக்கைதானே…

உணர்வுகளை

உணர்ந்து

கொள்வோம்…

உறவுகளை

பலப்படுத்துவோம்…!

-Natrinai Sasikumar

(02)

தேவைகளை

குறைத்துக்

கொள்ளுங்கள்…

விட்டுக்கொடுப்பதை

வளர்த்துக்

கொள்ளுங்கள்…

இந்த

இரண்டையும்

இறுகப் பிடித்துக்

கொள்ளுங்கள்…

ஒவ்வொரு

நாளையும்

வசந்தமாக்குங்கள்..!

-Natrinai Sasikumar

(01)

கனவுகளை

செதுக்கிக்கொண்டே

இருங்கள்….

கனவுகளை

துரத்திக்கொண்டே

இருங்கள்…

கனவுகள்

அனைத்துமே

கண்ணெதிரே

நிஜமாகும்…

_Natrinai Sasikumar

Hits: 62