Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

தினசரிச் செய்திகள், ஒருநிமிட யோசனை, சமையல் சமையல், தினம் ஒரு துளி, ஹாரிபாட்டர் நெடுந்தொடர், அறிவோம் அஞ்சல்தலை, சசிமாமாவும் அப்புவும் இன்னும் பல பயனுள்ள தகவல்களை தினந்தோறும் கேட்டுச் சுவைக்க www.natrinai.org என்ற இணையதளத்தை பார்வையிடுங்கள்

சமூக விழிப்புணர்வும், தமிழ்சேவையுமே
-நற்றிணையின் நோக்கங்கள்

  • தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்துவதோடு தமிழின்மீது ஆர்வத்தை ஏற்படுத்தி தமிழ்ப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு துவங்கப்பட்டதே நற்றிணை அறக்கட்டளை.  
  • ஏழை எளிய மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வதும், திறமையாளர்களை இனங்கண்’டு அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பதும் நற்றிணையின் செயல்பாடுகள் ஆகும்
  •  பள்ளி மாணவர்களிடையே தமிழில் பேச்சுப்போட்டியை இணையம் மூலமாக நடத்தி பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளோம்.  
  • 26.12.2016 முதல் 30.12.2016 வரை திருச்சியில் நடைபெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான கணிப்பொறி பயிற்சிக்கு நற்றிணை நேயர்களிடமிருந்து நன்கொடை வசூலித்து அளித்து பயிற்சி சிறப்பாக நடைபெற உதவியுள்ளோம்.
  • நற்றிணை இணைய ஒலிபரப்பின் 500-வது நாள் விழாக் கொண்டாட்டம் 2.10.2016 அன்று திருச்சி தமிழ்ச்சங்க வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிப் பங்களிப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தோம். வருகை தந்திருந்த நேயர்களுக்கு மதிய உணவு வழங்கி சிறப்பித்தோம்
  • திருச்சியில் பார்வைமாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்கு உதவும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ஜெகத்ஜோதி தன்னார்வலர் அமைப்புபற்றி இணையத்தில் அறிவிப்பு செய்து புதிய நபர்களை இணைத்துள்ளோம்.
  • பார்வை மாற்றுத் திறன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வாசித்துக் கொடுத்தல், இணையத்திலிருந்து தேவையான பகுதிகளை பதிவிறக்கம் செய்து கொடுத்தல், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்து கொடுத்தல் போன்ற உதவிகளை தன்னார்வலர்கள் மூலமாக செய்துவருகிறோம்.
  • தினந்தோறும் செய்தித் தாள்களில் வெளியாகும் முக்கியச் செய்திகளை வாசித்து இணையதளம் மற்றும் இணைய வானொலி மூலமாக ஒலிபரப்புச் செய்வது பார்வை மாற்றுத் திறனாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் வரவேற்கப்படுகிறது.
  • எதிர்வரும் காலங்களில் நற்றிணை அறக்கட்டளை சமூக அக்கறையோடு மேலும் பல சேவைகள் தொடர்வதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

  

Spread the love
  •   
  •   
  •  
  •  
  •  
  •  
  •  
நற்றிணைக்கு தங்களின் மதிப்பெண் எத்தனை? -தங்களுக்கு மிகவும் பிடித்த நிகழ்ச்சி எது?