நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

சரித்திரம் தொட்ட சம்பவங்கள்

1236-Tamil Sevai

பிரேசில் நாடு 1985.ல் வெளியிட்ட தட்பவெப்பநிலை மாற்றம் தொடர்பான அஞ்சல் தலை

Hits: 12

1225-TamilSevai


Google Maps புதுப்பிப்பு: புதிய பயனுறு தாவல் என்ன?
கூகிள் என்பது தேடல் மாபெரும் ஸ்டால்கார்ட் பயன்பாடுகளில் ஒன்றாகும். தொலைபேசிகளில் Google Maps பயன்பாட்டைப் பயன்படுத்தி தந்பொழுது கிட்டத்தட்ட இரண்டாவது இயல்பு உருவாகி உள்ளது. எல்லாவற்றையும் எப்படி எளிதாக்குவது என்பதையும் எடுத்துக்கொள்கிறது. நாம் வரைபடத்தின் நடுவில் சிறிய நீல புள்ளியாக இருக்கும்போது, உலகம் நம்மைச் சுற்றியுள்ளது. இது ஒரு நிலையான வரைபடத்தைப் பயன்படுத்தி ஒப்பிடும்போது அற்புதமான ஒன்றல்ல.
இதுஒரு அற்புதம் மற்றும் புரட்சி, எனினும், கதை முடிவில் ஒருபோதும். பரிணாமம் புரட்சியை பின்பற்ற வேண்டும், எனவே நம் வாழ்வில் எப்பொழுதும் மாறிக்கொண்டிருக்கும் ஏதோவொன்றை தொடர்ந்து மேம்படுத்துவதில் கூகுள் பொறுப்பாகிறது.
Google Maps இல் காணப்பட்ட சமீபத்திய புதுப்பிப்பு பயன்பாட்டினை இங்கே காணலாம்.
ஆண்ட்ராய்ட் காவல்துறையின் அறிக்கையின்படி, கூகுள் மேப்ஸில் உள்ள குழுவானது பல்வேறு புதிய டேப்களை சோதனை செய்து வருகிறது, இது முதலில் திறக்கப்படும் போது கூகுள் மேப்ஸ் கீழே உள்ள பொதுவான ஆய்வு, டிரைவிங் மற்றும் ட்ரான்ஸிட் தாவல்களுடன் (Explore, Driving and Transit tabs) இணைந்து செல்லுகிறது.
யு.எஸ் இல் உள்ள சில பயனர்கள் For You tab-ஐ பார்த்திருக்கிறார்கள், ஆனால் மிகவும் பொதுவாக காணப்பட்ட புதிய தாவல் என்பது Commute tab ஆகும். இந்த ஆரம்ப அறிக்கைகள் சரியாக இருந்தால், டிரைவ் மற்றும் ட்ரான்ஸிட் தாவலை மாற்றுவதற்கான தாவலை மாற்றுவது, அதாவது Google வரைபடம் முதல் திறந்திருக்கும் போது பயனர்கள் புதிய கீழ் தாவலில் இரண்டு விருப்பங்களைக் கண்டறிந்து, ஆராய்வதும், பரிமாற்றுவதும் ஆகும்.
புதிய பயனுறு தாவலைத் (new Commute tab) திறக்கும்போது பயனர்கள் வீட்டிற்கு பயணிக்க அல்லது வேலைக்கு பயணிக்க விருப்பங்களை வழங்குகிறது. தேர்வு செய்வது வரைபடத்தைத் திறக்கும் மற்றும் பக்கத்தின் கீழே இருக்கும் பயணத்தின் விருப்பத்தேர்வு கார்டுகள். நீங்கள் எடுக்கும் திசைகளை அல்லது உங்கள் இருப்பிடம், பல்வேறு வரைபட அடுக்குகளை மாற்றுதல், உங்கள் பாதை விருப்பங்கள் நிர்வகித்தல் போன்ற பல்வேறு பகிர்தல் விருப்பங்கள் மூலம் மெனு இருக்கும்.
பெரிய கூகிள் தயாரிப்புகளுக்கு சிறிய புதுப்பிப்புகளை தொடர்ந்து பார்க்கிறது. அவர்களுடனான தொடர்புகளில் இருந்து விலையுயர்ந்த விநாடிகளை ஷேவ் செய்ய விரும்புகிறது. சமீபத்திய பெரிய Google Chrome புதுப்பித்தல் நம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது, மேலும் Google Maps Commute தாவலும் சரியாகப் பொருந்துகிறது. வரைபடம் எப்பொழுதும் அதே தகவலைக் காட்டும் ஒரு மேம்படுத்தப்பட்ட வழியைப் போல தோன்றலாம், ஆனால் புதிய வடிவமைப்பானது விரைவாக செயல்படப் போகிறது, எங்கிருந்து குறைந்த அளவிலான படிகளை எடுக்கும் என்ற தகவலைப் பெறுவதற்கு அதிக கவனம் செலுத்துகிறது.

குறிப்பு:- இக்கட்டுரை புரிந்தால் நண்பர்களுக்கு மட்டும் பகிருங்கள். புரியாவிட்டால் அனைவருக்கும் பகிருங்கள்.

Hits: 14

1220-TamilSevai

 

இறை நம்பிக்கை நமை எப்போதும் காக்கும்!

அந்த விவசாயியின் ஜாதகத்தை சோதித்து பார்த்த ஜோதிடருக்கு, உள்ளூர தயக்கம்! காரணம்..?
அன்றிரவு எட்டு மணிக்கு அந்த விவசாயிக்கு மரணம் நேரக்கூடிய கண்டம் இருந்தது!
அதை அவரிடம் நேரிடையாக சொல்ல விரும்பாமல்,
“ஐயா… எனக்கு நிறைய வேலைகள் உள்ளன. உங்கள் ஜாதகம் என்னிடமே இருக்கட்டும்! நாளை காலையில் என்னை வந்து பாருங்கள்!’’ என்றார்.
ஜோதிடரின் வீட்டிலிருந்து புறப்பட்ட விவசாயி, தன் கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தபோது, மாலை சாய்ந்து இருள் சூழ ஆரம்பித்தது! அப்போது, லேசாக மழைத்தூறல் ஆரம்பிக்க… சற்றைக்கெல்லாம் பெருமழை கொட்ட துவங்கியது! மழையில் நனைந்தவாறே, சுற்றுமுற்றும் பார்வையை சுழலவிட்டவரின் கண்களில்…
அந்த பாழடைந்த சிவன் கோயில் தென்பட…… ஓடோடிச்சென்ற அவர், கோயிலின் முன்னே இருந்த மண்டபத்தில் ஒதுங்கினார்.
மண்டபத்தில் நின்றவாறே, கோயிலின் பாழடைந்த நிலை கண்டு உள்ளூர வருந்தினார். ‘தன்னிடம் போதுமான பணம் இருந்தால் அக்கோயிலை புதுப்பிக்கும் வேலையை செய்வேன்’ என்று மானசீகமாக நினைத்துக் கொண்டார்.
அத்தோடு நில்லாமல் அக்கோயிலை புதுப்பிப்பதாக கற்பனையும் செய்து கொண்டு… கோபுரம்… ராஜகோபுரம்… உட்பிராகாரங்கள் மற்றும்… மண்டபங்கள் முதலானவற்றை மனதிற்குள் கற்பனையாகவே அமைத்து… வேதியர்கள் புடைசூழ கும்பாபிஷேகமும் விமரிசையாக நடத்தி… என மழையை வேடிக்கை பார்த்தவாறே
தன்னை மறந்து சிந்தனைகளில் ஈடுபட்டிருந்தார். அவரின் பார்வை தற்செயலாக மண்டபத்தின் இருளான ஒரு மூலையை நோக்க…
அங்கே ஒரு பெரிய கருநாகம் படமெடுத்த நிலையில்… கொத்த வரும் பாவனையில் சீரிக்கொண்டு இருந்தது! சூழ்நிலையின் விபரீதத்தை உணர்ந்த அவர், மறுகணம் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வரவும், ‘சடார்’ என்று ஒரு மின்னல் மண்டபத்தை தாக்க ஏற்கெனவே பாழ்பட்டிருந்த மண்டபம் ‘கிடுகிடுவென்று இடிந்து விழவும் சரியாக இருந்தது!
இப்போது மழையும் நின்று விட்டிருக்க… விவசாயியும் அதிர்ச்சி விலகாமல் வீடு போய் சேர்ந்தார்.
பொழுது விடிந்ததும் முதல் வேலையாய் ஜோதிடர் வீட்டுக்கு சென்ற அவரை கண்டு ஜோதிடருக்கு வெகு ஆச்சரியமும், திகைப்பும்!
‘எப்படி இது சாத்தியம்? நாம் ஜோதிடக் கணக்கில் தவறி விட்டோமோ’ என்று பலவாறான எண்ண அலைகளுடன் மீண்டும் விவசாயி ஜாதகத்தை மிகத்துல்லியமாக ஆராய்ந்தார்.
அவரது கணக்கு சரியாகவே இருந்தது! அவர் மிகப் பழைமையான ஜோதிட நூல்களை ஆராய்ந்து கொண்டிருந்தபோது, ‘இப்படிப்பட்ட கண்டத்திலிருந்து ஒருவன் தப்ப வேண்டுமானால், அவனுக்கு ஒரு சிவன் கோயிலை கட்டி முடித்து, கும்பாபிஷேகமும் செய்த புண்ணியம் இருக்கவேண்டும்’ என்று ஒரு ஜோதிட நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது!
‘ஒரு ஏழைக்கு, சிவன் கோயிலை கட்டி, கும்பாபிஷேகமும் செய்வது என்பது எப்படி சாத்தியம் ‘என்று எண்ணியவாறே ஜோதிடம் அறிவித்த அனைத்து விவரங்களையும் அவரிம் அந்த ஜோதிடர் இப்போது எடுத்துரைக்க அவரோ, வெகு இயல்பாக முந்திய நாள் இரவு தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரிடம் எடுத்துரைத்தார்!
கேட்டுக் கொண்டிருந்த ஜோதிடருக்கு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி!!! …..இறைப்பணி பற்றிய கற்பனை கூட விதியை வெல்லும். நல்ல சிந்தனைகள் நல்ல பலனை விளைவிக்கும்!
அடடா… என்னே அந்த ஈசனின் கருணை!
தென்னாடுடைய சிவனே போற்றி! போற்றி!
🌸🙏🏼🙏🏼🙏🏼🌸

Hits: 44

1215-TamilSevai

தேங்காய் பவுடர்பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்

தேங்காய் ஒரு அற்புதமான உணவு என்றே கூறலாம். இது நிறைய விதங்களில் பயன்படுகிறது. தேங்காய், தேங்காய் தண்ணீர் மற்றும் தேங்காய் எண்ணெய் என்று பலவிதங்களில் இதை நாம் சமையலில் பயன்படுத்துகிறோம்.

ஆனால் தேங்காய் மாவை பற்றி நீங்கள் கேள்விப்பட்டது உண்டா? ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும் இந்த தேங்காய் மாவை பற்றி தான் இக்கட்டுரையில் நாம் காண உள்ளோம்.

தேங்காய் துருவல்

மற்ற மாவுப் பொருட்களை ஒப்பிடும் போது இந்த தேங்காய் மாவு க்ளூட்டன் இல்லாத ஒன்றாகும். இந்த மாவு தேங்காய் பாலை பிரித்தெடுத்து விட்டு அதன் தேங்காய் துருவலை நன்றாக உலர வைத்து தயாரிக்கப்படுகிறது.

தேங்காய் மாவில் நார்ச்சத்துகள், ஆரோக்கியமான கொழுப்புகள், புரோட்டீன் போன்றவைகள் உள்ளன. சர்க்கரை சத்தும் குறைவாகவும், கார்போ ஹைட்ரேட், கலோரிகள் மற்றும் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு எண் கொண்டும் காணப்படுகிறது.

அமெரிக்க நீரிழிவு சங்க கருத்துப்படி இதிலுள்ள நார்ச்சத்துகள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் குறைந்த கிளைசெமிக் குறியீட்டை கொடுக்கிறது. இதனால் உங்கள் இரத்த சர்க்கரை அளவு உடனடியாக அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. எனவே இந்த தேங்காய் மாவு சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகும். மேலும் டயாபெட்டீஸ் நோயாளிகள் தங்களுடைய எடையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இது உதவுகிறது.

தேங்காய் மாவில் அதிகளவு ஆரோக்கியமான சேச்சுரேட்டேடு கொழுப்பு உள்ளது. இது ஒரு மீடியம் சங்கிலி கொழுப்பு அமிலங்கள் வடிவில் உள்ளது. எனவே இந்த கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து மெட்டா பாலிசத்தை அதிகரிக்க செய்கிறது. இந்த மீடிய சங்கிலி கொழுப்பு தொடர் உடம்பில் தேங்கியுள்ள கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது.

உங்களுக்கு மலச்சிக்கல் தொல்லை இருந்தால் தேங்காய் மாவு சிறந்தது. இதில் உள்ள கரையாத நார்ச்சத்துகள் மலத்தை எளிதாக வெளியேற்ற உதவுகிறது. மேலும் குடலில் நல்ல பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து சீரண ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது.

தேங்காய் மாவில் உள்ள அதிகப்படியான சத்துகள் இதய ஆரோக்கியத்திற்கு துணை புரிகிறது. இது நமது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை (LDL) குறைத்து நல்ல கொலஸ்ட்ரால் ஆன HDL அளவை கூட்டுகிறது. இதனால் உங்களுக்கு இதய நோய்கள் வராமல் தடுக்கப்படுகிறது.

இந்த தேங்காய் மாவில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் நமது ஒரு நாள் தேவைக்கான புரோட்டீன் அளவை பூர்த்தி செய்கிறது. இதனால் செல்கள், தசைகளை சரி செய்து அது மீண்டும் புத்துயிர் பெற உதவுகிறது. நமது உடலில் உள்ள எலும்புகள், தசைகள், குருத்தெலும்புகள் மற்றும் சருமம் கட்டுமானத்திற்கு புரோட்டீன் சத்து மிகவும் அவசியம்.

தேங்காய் மாவில் ஆன்டி வைரல், பூஞ்சை எதிர்ப்பு பொருள், ஆன்டி மைக்ரோபியல் பொருட்கள் உள்ளன. ஆன்டி மைக்ரோபியல் பொருளான தேங்காயில் உள்ள லாரிக் அமிலம் வாய் புண்ணிற்கு உதவுகிறது.

தேங்காய் மாவு க்ளூட்டன் இல்லாதது. அதாவது கோதுமை மாவில் உள்ள எலாஸ்டிக் தன்மை இதில் கிடையாது. அதிகமான க்ளுட்டனை எடுத்துக் கொள்ளும் போது அழற்சி நோய்களான முடக்குவாதம் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இந்த க்ளூட்டனால் மெட்டா பாலிக் சின்ட்ரோம், உடல் பருமன், நரம்பியல் பிரச்சினைகள், இதய நோய்கள் போன்றவற்றை ஏற்படுத்துகிறது.

இந்த தேங்காய் மாவு இயற்கையாகவே நமக்கு கிடைக்கும் ஒரு அற்புத பொருள். இது ஸ்வீட் செய்யும்போதும் மற்ற இனிப்பு பலகாரங்களில் சேர்த்துப் பயன்படுத்தலாம். இது மற்ற பொருட்களுடன் எளிதாக கலந்து கொள்வதால் பிசைவதற்கும் எளிதாகவும் அதே நேரத்தில் நல்ல சுவையையும் லேசான நறுமணத்தையும் கொண்டு இருக்கிறது.

எனவே இந்த தேங்காய் மாவை வேற எந்த மாவுடன் வேண்டுமென்றாலும் சேர்த்து நிறைய டிஷ்கள் செய்து நன்மைகளைப் பெறலாம். சமையலில் இந்த தேங்காய் மாவு, சூப் போன்றவற்றை அடர்த்தியாக்க திக்காக மாற்ற சேர்க்கப்படுகிறது.

இது குறித்த தங்கள் கருத்துக்களை Comment பகுதியில் பதிவிடுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் Share செய்யுங்கள். நன்றி.

Hits: 13

1209-TamilSevai

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்

விநாயகர் சதுர்த்தி பூஜையில் வைக்க வேண்டியவைகள்

நீங்கள் நன்கு உற்று கவனித்தால் பிள்ளையாருக்கு படைக்கப்படும் பொருள்கள் மிகவும் எளிமையானதாகவே இருக்கும். பெரிதாக நீங்கள் சிரமப்படவே தேவையிருக்காது.

வீட்டுப் பூஜை பெரும்பாலும் விநாயகர் சதுர்த்தி அன்று எல்லாருடைய வீடுகளிலும் விநாயகர் உருவ சிலை தங்களால் முடிந்ததை வைத்து வழிபடுவோம். அது வெறுமனே களிமண் சிலையாகவோ, அதுவும் இயலாதவர்கள் வெறுமனே வீட்டில் உள்ள மஞ்சள் பொடியில் கைகளால் பிள்ளையார் பிடித்து வைத்தோ வழிபடுவது உண்டு.

அலங்காரம் அப்படி ஒரு பிள்ளையாருக்கு சின்ன சின்ன கலர் பொம்மை குடைகள் வாங்கி வந்து, எருக்கம்பூ அணிவித்து அருகம்புல் சாத்தி, செவ்வந்தி, மல்லிகை, அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.

வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரும் ஆவலாக எதிர்பார்த்து காத்திருப்பது பிள்ளையாருக்கு வைக்கும் படையலைத் தான்.

கொழுக்கட்டை, அப்பம், சுண்டல், வடை, அவல், பொரி என அத்தனையும் வேத்தியமாக வைக்கப்படும். அதேபோல் பழங்களில் ஆப்பிள்ஈ திராட்சைஈ நாவல் பழம், முக்கியமாக விளாம்பழம் கட்டாயம் இருக்கும். வாழைப்பழம், தேங்காய் வழக்கம் போல் வைக்கப்படும்

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நான்கும் கலந்துனக்கு நான் தருவேன். துங்கக் கரிமுகத்து தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா என்று பாடி வழிபடலாம்.

மறுநாள் புனர்பூஜை என்று அழைக்கப்படுகிற சிறிய அளவிலான பூஜையை செய்து, நல்ல நேரம் பார்த்து பிள்ளையார் சிலையை கிணற்றிலோ குளம், ஆறு, கடல் எதுவாக இருந்தாலும் அதில் போட்டு கரைத்துவிடலாம். இப்படித்தான் உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஆடம்பரம் என்பது அவரவர் பொருளாதார நிலையைப் பொருத்தது.

21 வகை பச்சிலைகள் விநாயகர் சதுர்த்தியன்று அவருக்கு இஷ்டமான 21 வகை யான பச்சிலைகளை வைத்து பூஜை செய்தால் இன்னும் விசேஷம்.

அந்த 21 வகை இலைகள் மற்றும் பலன்கள்:

 1. முல்லை இலை – வீட்டில்அறம் வளரும்.
 2. கரிசலாங்கண்ணி – வாழ்க்கைக்குத் தேவையான பொன்னும் பொருளும் வந்து சேரும்.
 3. வில்வ இலை – இன்பமும் நீங்கள் மனதில் விருமு்பியவை அனைத்தும் கிடைக்கும்.
 4. அருகம்புல் – அனைத்துவிதமான சௌபாக்கியங்களும் கிடைக்கும்.
 5. இலந்தை இலை – கல்வியில் பிள்ளைகளுக்கு மேன்மை உண்டாகும்.
 6. ஊமத்தை இலை – தாராள மனம் பெருகும்
 7. வன்னி இலை – இந்த ஜென்மத்திலும் சொர்க்கத்திலும் கூட மகிழ்ச்சி உண்டாகும்.
 8. நாயுருவி இலை – முகத்தில் பொலிவும் உங்களுடைய உடல் உள்ள அழகும் கூடும்.
 9. கண்டங்கத்தரி இலை – மன தைரியமும் வீரமும் அதிகரிக்கும்.
 10. அரளி இலை – எடுக்கின்ற எல்லா முயற்சியும் கைகூடி வரும்.
 11. எருக்கம் இலை – கருவில் உண்டாகும் குழந்தைக்கு பாதுகாப்பு தரும்.
 12. மருத இலைகள் – மகப்பேறு செல்வம் கிடைக்கும்.
 13. விஷ்ணுகிராந்தி இலை – நுண்ணறிவு பெருகும்.
 14. மாதுளை இலை – பெரும் புகழும் நல்ல பெயரும் கிடைக்கும்.
 15. தேவதாரு இலை – எதையும் தாங்குகின்ற மன தைரியம் கிடைக்கும்.
 16. மரிக்கொழுந்து இலை – இல்லற சுகம் அதிகமாகக் கிடைக்கப்பெறும்.
 17. அரச இலை – உயர் பதவியும் அந்த பதவியின் மூலம் வெற்றியும் கிடைக்கும்.
 18. ஜாதிமல்லி இலை – சொந்த வீடு, மனை பாக்கியம் கிடைக்கும்.
 19. தாழம்பூ இலை – செல்வச் செழிப்பு உண்டாகும்.
 20. அகத்தி இலை – கடன் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.
 21. அருகம்புல் மாலை அர்ச்சனை இந்த எல்லாவற்றையும் விடவும் புனிதமாகவும் விசேஷமானதாகவும் இருக்கும்.
குறிப்பு:-
தங்கள் கருத்தை இங்கே பதிவிடுங்கள்.  நண்பர்களுக்கும் பகிர்வு செய்யுங்கள். தங்கள் வருகைக்கு நன்றி.

Hits: 16

1208-TamilSevai

Hits: 33

 • 178,174
 • 60,762
நேயர் கருத்து