பாட்டோடுதான்…

-கோவை சூரியகாந்தன்-

நற்றிணை நேயர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம். கடந்த 2017-ம் ஆண்டில் நற்றிணை இணையதளத்தின் சேவையினை நான் கேள்விப்பட்டேன். அதன்பிறகே இதில் நிகழ்ச்சிகளைத் தருவதற்கும் முன்வந்தேன். இலக்கியச் சிறகு என்ற தலைப்பிலே ஒவ்வொரு நாளும் நான் வழங்கிய சிற்றுரைகளுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தன. அதனைத் தொடர்ந்து இன்றளவும் பாட்டோடுதான் நான் பேசுவேன் எனும் தலைப்பில் உங்கள் இதயங்களிலே தென்றலாக வீசிக்கொண்டிருக்கிறேன்…>>

கதை சொல்லும் நீதி

-திட்டக்குடி முக்கனி

அன்பு நேயர்களுக்கு இனிய வணக்கம். நான் திட்டக்குடி முக்கனி. வங்கிப் பணியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் நான் வாட்ஸப் வழியாக வந்து கொண்டிருந்த நற்றிணைப் பதிவுகளை மிகவும் ரசித்துக் கொண்டிருந்தேன். நற்றிணையில் வெளிவரும் நித்தம் ஒரு முத்து என்ற நிகழ்ச்சி என்னை மிகவும் கவர்ந்த நிகழ்ச்சி. பலநேரங்களில் எனக்கு ஆறுதல்களையும் உற்சாகத்தையும் ஏற்படுத்திய பங்கு அந்த நிகழ்ச்சிக்கு உண்டு. அந்த நிகழ்ச்சியைப் பாராட்டி நற்றிணைக்கு கருத்து…..>>

அறிவோம் அஞ்சல்தலை 

-ஸ்ரீதர்

அஞ்சல்தலை சேகரிப்பது எனக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. மிகவும் ஆர்வமுடன் அஞ்சல்தலைகளை கடந்த 25 வருடங்களாக சேகரித்துக் கொண்டிருக்கிறேன். 2016-ம் வருடன் மே மாதம் THE HINDU நாளிதழில் நற்றிணை இணைய வானொலி பற்றிய கட்டுரை ஒன்றை வாசித்தேன். அதில் எழுதப்பட்டிருந்த தகவல்கள் என்னை மிகவும் ஈர்த்தன. உடனடியாக நற்றிணை இணைய வானொலியை செவிமடுத்தேன். அதில் ஒலித்துக் கொண்டிருந்த கருத்துக்களை மிகவும் ரசித்தேன். உடனடியாக திரு.ஞானப்பிரியன் அவர்களைத் தொடர்பு கொண்டு மிகச்சிறந்த தமிழ்ப் பணிக்கான எனது வாழ்த்துக்களைத் தெரிவித்தேன்…>>

நித்தம் ஒரு முத்து

அரிமழம் செ. ஞானப்பிரியன்

நற்றிணை நேயர்களுக்கு நன்றிகலந்த வணக்கங்கள். தமிழின் சிறந்த புத்தகங்களின் ஒரு சில பக்கங்களை தினந்தோறும் வாசித்து அளிக்கிறேன். துவக்கத்தில் சோதனை முயற்சியாக துவஙகினேன். நேயர்களின் ஏகோபித்த வரவேற்பால் எனது சேவையைத் தொடர்ந்து செய்து வருகிறேன். பொழுதுபோக்கு சாதனங்கள் மலிந்துகிடக்கும் இன்றைய சூழலில் புத்தகம் வாசிக்கும் பழக்கம் இன்றைய இளைஞர்களிடையே மிகவும் குறைந்துவிட்டது. ஆனால்….>>

சமையல் சமையல்

-சென்னை அலமேலு

ஒவ்வொரு நாளும் நற்றிணையில் வலம் வந்து கொண்டிருக்கும் சமையல் சமையல் என்ற பகுதியில் பார்வை மாற்றுத் திறனாளியான சென்னை அலமேலு அவர்கள் வித்தியாசமான பல பயனுள்ள சமையல் குறிப்புகளை வழங்கி வருகிறார். பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்களும் விரும்பிக் கேட்கும் இப்பகுதி நேயர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்ற நிகழ்ச்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது.  தென்மாநில மற்றும் வடமாநில சமையல் குறிப்புகள் இங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. நேயர்கள் கேட்டுப் பயன்பெறலாம். இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள comments பகுதியில் பதிவு செய்யலாம். தங்கள் நண்பர்களும் இதைக் கேட்டுப் பயன்பெற சமூக ஊடகங்களில் பகிர்வு செய்யலாம்.

நாளும் ஒரு விதை

-விருதுநகர் சாமி-

விருதுநகர் பேராசிரியர் சாமி அவர்கள் நற்றிணையில் தினந்தோறும் விதைக்கும் நாளும் ஒரு விதை என்ற சிந்தனையைத் தூண்டக்கூடிய ஒலிக்குறிப்புகள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. தனது குரல்வளத்தால் நிகழ்ச்சிக்கு அழகு சேர்க்கும் இவரது பாணி உலகத் தமிழர்களால் பெரிதும் வரவேற்கப்படுகிறது. பழமையான பல தகவல்களை புதுமையாகத் தரும் இவரது பதிவுகளைக் கேட்டு பயனடையுங்கள். இதுகுறித்த தங்கள் கருத்துக்களை கீழேயுள்ள Comment பகுதியில் பதிவிடுங்கள். ஒரு கலைஞனின் வளர்ச்சிக்கு இதுதானே தூண்டுகோல்? இப்பகுதி தங்களைக் கவர்ந்திருந்தால் தங்கள் நண்பர்களுக்கும் பகிர்வு செய்யுங்கள்.

தினம் ஒரு துளி

-சென்னை அலமேலு-

சென்னை அலமேலு

வீட்டு உபயோகக் குறிப்புகள், எளிய மருத்துவக் குறிப்புகள் போன்ற அன்றாட வாழ்வில் பயன்படும் பல பயனுள்ள தகவல்களை ரத்தினச் சுருக்கமாக தெளிவாக விளக்குகிறார் சென்னை அலமேலு. தினம் ஒரு துளி எனும் தலைப்பில் தினந்தோறும் நற்றிணையில் ஒலி வடிவில் அளித்து வரும் நிகழ்ச்சிகளின் தொகுப்பு இங்கு வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்குமான பல குறிப்புகளும் இங்கு இடம்பெற்றுள்ளன. இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை இங்குள்ள comments பகுதியில் பதிவிடுங்கள். இக்குறிப்புகளை பலரும் கேட்டுப் பயன்பெற விரும்பினால் சமூக ஊடகங்களில் பகிர்வு செய்யுங்கள்.

சிலப்பதிகார விருந்து

-காரைக்குடி இராம. இராமனாதன்-

சிலப்பதிகார காப்பியத்தை மிக எளிய நடையில் நற்றிணையில் தினந்தோறும் ஐந்து நிமிடம் வழங்கினார் காரைக்குடி பேராசிரியர் இராம.இராமனாதன் அவர்கள்.  சென்னை கன்னிமாரா நூலகத்தில் 22.10.2017 அன்று முனைவர் சிலம்பொலி சு. செல்லப்பனார் அவர்கள் முன்னிலையில் இப்பதிவின் குறுந்தகடு  வெளியிடப்பட்டது. உலகத் தமிழர்கள் அனைவரும் இக்காப்பியத்தைக் கேட்டுப் பயன்பெறும் வகையில் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. சிலப்பதிகாரத்தின் பெருமையை இவ்வுலகுக்கு எடுத்துக் கூறுவதையே தனது வாழ்நாள் சேவையாக செய்து வரும் ஐயா அவர்கள் முழுக்காப்பியத்தையும் தமிழ்கூறும் நல்லுலகுக்கு வழங்கியுள்ளார்கள்.

ஒரு நிமிட யோசனை

-திருச்சி அனுகீர்த்தனா-

அனைத்து உள்ளங்களுக்கும் அன்பு வணக்கம். பள்ளியில் நடக்கும் பல பேச்சுப்போட்டிகளில் நிறைய பரிசுகளை வாங்கியிருக்கிறேன். குரல்வளம் சிறப்பாக இருப்பதாக பலரும் அவ்வப்பொழுது பாராட்டுவார்கள்.  பழமொழிகள், ஆன்றோர் சிந்தனைகள், தத்துவ முத்துக்கள் போன்ற மனித வாழ்க்கைக்கு உற்சாகம் அளிக்கக் கூடிய கருத்துக்களை நற்றிணை நேயர்களுக்கு வழங்க வேண்டும் என்ற ஆவலில் தினந்தோறும் ஒரு கருத்தை ஒலிவடிவில் வழங்கிவருகிறேன். தமிழ்நாட்டில் மட்டுமல்லாது அயல்நாடுகளிலிருந்தும் வரும் பாராட்டுக்கள் என்னை மேலும் உற்சாகமூட்டுகிறது. காலையில் என்குரலைக் கேட்பது மிகவும் மனதுக்கு இதமாக இருப்பதாகவும், சிந்திக்க வைப்பதாகவும் பலரும் தெரிவித்திருக்கிறார்கள். இத்தொகுப்பு உங்கள் பார்வைக்காக இங்கு வரிசைப் படுத்தப்பட்டுள்ளது. இதில் உள்ள நிறைகுறைகளை தெரிவித்தால் எனது வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருக்கும். எனவே, இந்நிகழ்ச்சி குறித்த தங்கள் கருத்துக்களை இங்குள்ள பின்னூட்டப் பகுதியில் (Comments)  பதிவிடுங்கள். தங்கள் நண்பர்களுக்கும் பகிர்வு செய்யுங்கள்.

என்றும் நன்றியுடன்
ச. அனுகீர்த்தனா
திருச்சி