நற்றிணை வானொலியில் தினமும் காலை மற்றும் மாலையில் 6 முதல் 7 மணிவரை-பக்திப் பாடல்கள் • 7 முதல் 8 மணிவரை-சாரல் • 8 முதல் 6 மணிவரை-இசையருவி -ஒலித்துக் கொண்டிருக்கிறது.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

17-03-2018 (Thamil Sevai-1029)


இறைவனின் பசி 

ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார். ஒரு நாள் அவர், தன் தோட்டத்தில் விளைந்த வாழைக்குலை ஒன்றை தனது பணியாளரிடம் கொடுத்து, கோவிலில் கொடுக்கச் சொன்னார்.

ஏழைப் பணியாளர் அதனை எடுத்துச் செல்லும் வழியில், அவனுக்கு அதிகப் பசியெடுக்கவே அக்குலை யிலிருந்து இரண்டு பழங்களைப் பிய்த்துச் சாப்பிட்டு விட்டான்..

மீதிப் பழங்களை கோவிலில் கொடுத்தான். அன்றிரவு செல்வந்தர் ஒரு கனவு கண்டார். கனவில் இறைவன் வந்து நீ எனக்குக் கொடுத்த இரண்டு பழங்களை நான் சாப்பிட்டேன்; ருசியாக இருந்தது என்றார்

செல்வந்தனுக்கு மிக்க சந்தோசமும கூடவே அதிர்ச்சியும் வந்தது.

ஒரு குலை பழம் கொடுத்திருக்க, இரண்டு மட்டுமே இறைவனுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது. மீதி என்னவாயிற்று எனக் கோபப்பட்டான்.

மறு நாள் காலை அந்தப் பணியாளரைக் கூப்பிட்டு விசாரித்தான்.

அப்போது அவன், இரண்டு பழங்களைப் பசியினால் தான் சாப்பிட்டதை ஒப்புக் கொண்டு ,மீதிக் குலையைக் கோவிலில் கொடுத்து விட்டதைச் சொன்னான்.

செல்வந்தனுக்கு புரிந்தது. அந்த ஏழை சாப்பிட்ட பழம் மட்டுமே, இறைவனைச் சென்று அடைந்திருக்கிறது என்று.

*நீதி* : ஏழைக்குச் செய்யும் உதவியே, இறைவனுக்குச் செய்யும் தொண்டு.

Hits: 119

One Response to 17-03-2018 (Thamil Sevai-1029)

 • இன்று 17-03-2018 நற்றிணையில் வழங்கப்பட்ட நிகழ்ச்சிகள் யாவும் அருமை…அருமை…!!.

  நற்றிணை, தொடரட்டும் உங்கள் சேவை….வாழ்த்துக்கள்…!!

  நன்றியும் மகிழ்வும்??????

  மனோகரன் த/பெ கிருஷ்ணன்
  சிங்கப்பூர்,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 • 234,480
 • 81,498
 • 4
நேயர் கருத்து