* தினசரிப் பதிவுகள் * ஒருநிமிட யோசனை * கதையோடு விளையாடு * அறிஞர்கள் வாழ்வில் * குறள் தரும் அமுதம் * திருத்தொண்ட தொகை * கவிதைச்சாரல் * சமையல் சமையல் * தினம் ஒரு துளி * பொது அறிவுக் குவியல் * வெற்றிப்படிகள் * பாட்டோடுதான் * இயற்கைஇயல் * நாளும் ஒரு விதை * ஹாரிபாட்டர் தொடர் * அறிவோம் அஞ்சல்தலை * சிலப்பதிகார விருந்து * சசிமாமாவும் அப்புவும் * வாட்ஸப் வழி பட்டிமன்றம் * சிறப்பு நாடகங்கள் * சரித்திரம் தொட்ட சம்பவங்கள் * -போன்ற பயனுள்ள ஒலித் தொகுப்புகளை www.natrinai.org என்ற இந்த இணைய தளத்தில் கேட்டு மகிழுங்கள்.
Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

NATRINAI FM

1827May23

நற்றிணை 6-ம் ஆண்டு துவக்கம் -வாழ்த்துக்கள்

ஜோவிதா, நாமக்கல்
கந்தர்வகோட்டை கருப்பையா
பொருணை பாலு, திருநெல்வேலி
ரேவதி கணேசன், சீர்காழி புத்தூர்
மணக்கால் அய்யம்பேட்டை, நாராயணதாஸ்

🌸🌸🌸
திரு சசிகுமார் அவர்களுக்கு
தங்கள் நற்றிணை சேவை இன்னும் பல ஆண்டுகள் கடந்து நல்ல சேவைகள் செய்ய வாழ்த்துகள்
🌸🌸🌸
வாசுதேவன், சென்னை

ஆறாம் ஆண்டில்
அடியெடுத்து வைக்கும்
நற்றிணையின் நற்பணிகள்
நானிலம் போற்ற
வெற்றியுடன் தொடர
என் நேசமான வாழ்த்துகள் !

-காரைக்கால் கே.பிரபாகரன்

மென்மேலும் வளர்ந்து தங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துகள்.

-கோகுல், டைம்ஸ் ஆஃப் இந்தியா, திருச்சி

இன்று ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நற்றிணை வானொலி தன் சேவையை மென்மேலும் தொடர வேண்டும் என்று மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கி வேண்டி வாழ்த்துகின்றேன்.

-மதுரை சந்தைப்பேட்டை ஓகே சிவா

காலை வணக்கம் நமது நற்றினை வானொலி 6ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்க்கும் உன் பணிகள் மேன் மேலும் சிறப்பு அடைய என் உள்மனதின் வாழ்த்துகள் பல

-g.revathi ganesan puthur..

Congrats….and Happy wishes…!

-Nana, (India Today), Chennai.

இன்று ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நற்றிணை குழுமத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகள்&பாராட்டுகள்

-அன்புடன் நெல்லை. சௌந்தர்

ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நற்றினை எட்டுத்திக்கும் வெற்றிகொடி பறக்கட்டும் என அன்புடன் வாழ்த்துகிறேன் மதிப்பிற்குரிய சசிக்குமார் ஐயா சேவை வாழ்க வளர்க

-சரவணன்,  ஆசிரியர்,  முதலைப்பட்டி.

Congratulations to Natrinai Team.

-AadTechMedia, Jayaraman, Trichy.

வாழ்த்துக்கள் மென்மேலும் வளர்ந்து. சமூகத் தொன்றாட்டவேண்டும்.

-அலாய்சியஸ், சென்னை.

நற்றிணை அறக்கட்டளை மற்றும் நற்றிணை ஊடகப் பணி துவங்கி இன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நற்றிணை மூலம் நான் பெற்ற இன்பம் அளவிட முடியாதது நற்றிணையில் வலம் வரும் அனைத்து நிகழ்வுகளுமே அறிவுக்கும் மனதிற்கும் விருந்தாக அமைவது மிக மகிழ்ச்சியைத் தருகிறது. இங்கு வளம் வரும் கதைகள் மற்ற கவிதைகள் பொது அறிவு குவியல் போன்ற அனைத்து நிகழ்வுகளுமே மிக அருமை குறிப்பாக நற்றிணையின் வெற்றிப்படிகள் எங்கள் மாணவர்களை ஒரு திறமைசாலிகளாக மாற்றியது என்று கூறினால் அது மிகையாகாது நற்றிணையின் சேவைகள் தொடரட்டும் நற்றிணையின் சேவைகள் பரவட்டும் உலகெங்கும். நற்றினை நிறுவனத்திற்கும் திரு சசிகுமார் ஐயா அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் அன்பின் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

-பிரபு   பட்டதாரி ஆசிரியர் நாமக்கல்.

நற்றிணயின் ஐந்தாண்டு சேவை அற்புதமானது! ஆறாமாண்டில் தொடரும் இப்பணி இன்னும் 100 ஆண்டுகள் கடக்க எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகள்!

-பாலசுந்தரம், உள்ளகரம்.

6- ஆம் ஆண்டில்  அடி எடுத்து வைக்கும் நற்றினை வானொலிக்கு  அன்பான, இதயங்கனிந்த இனிமையான நல் வாழ்த்துக்கள்.

-K.V.ஜெயசீலன்.  கொடமாண்டப்பட்டி.

நற்றிணை என்னும் பூமாலையில் நானும் ஒரு பூவாய் இருப்பதில் மனம் மகிழ்கிறேன் இந்த பூஞ்சோலை இன்று போல் எந்நாளும் பூத்துக்குலுங்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

-ஈரோடு செந்தில்குமார்

இனிய விடியல் மற்றும் நற் காலை வணக்கம்.. நம் நற்றிணை ஊடகம் மேற்கொள்ளும் அனைத்து சமூக முன்னேற்றம் குறித்த தங்களின் அன்பான தகவல்கள் மேன்மேலும் சிறக்க நல் வாழ்த்துக்கள்

-அன்புடன் நாகராஜன் அருப்புக்கோட்டை.

நற்றினைக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்!

மேன்மேலும் சிறந்து வளர்க!!

-தன்ராஜ், திருச்சி

வாழ்க வளமுடன். ஆறாவது பிறந்தநாள் கொண்டாடும் நற்றிணைக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள்.நற்றிணை யை வழிநடத்தும் திரு.சசிகுமாரின் சேவை தொடரட்டும்.உங்களது சேவை தொடரட்டும்.உங்களது சேவை சிறக்க வாழ்த்துகள்.

-சா. தேன்மொழிமுத்துகுமரசாமி.

நற்றிணை:
எட்டுத்தொகை நூல்களில் முதலிடம்..

எட்டுத்திக்கும் அனைவரின் மனங்களிலும் சிறப்பிடம் பெற்று..

அறம், கொடை, கல்வி, ஊக்கம் கொண்டு ..
தமிழின் அடையாளமாய்..

ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும்..
நற்றிணை அறக்கட்டளை

இன்னும் பற்பல ஆண்டுகள் புகழ் பெற்று விளங்கவும்..
சேவையில் சிறந்து விளங்கவும்..

எம் பள்ளியின் சார்பாகவும்…
பள்ளி மாணவர்கள் சார்பாகவும்..

நல்வாழ்த்துக்கள்..

– ப.சீனிவாசன்,  ஆசிரியர்..

வணக்கம்‌. நான் விஜய் ஹரி. நற்றினையில் நானும் பங்கு கொண்டு உள்ளேன் என்ற பெருமையில் ஐந்தாண்டுகளை கடந்து ஆறாவது ஆண்டில் அடி எடுத்து வைக்கும் என் நற்றினைக்கு நான் எனது வாழ்த்துக்களை அகரவரிசையில் சமர்ப்பிக்கிறேன்.

அறிவுக்கு நற்றிணை.

ஆர்வத்திற்கு நற்றிணை.

இக்கணமும் நற்றிணை.

ஈடில்லா நற்றிணை.

உலகெங்கும் நற்றிணை.

ஊக்குவிக்கும் நற்றிணை.

எல்லோருக்கும் பிடித்த நற்றிணை.

ஏற்றம் தரும் நற்றிணை.

ஐந்தாண்டுகளை கடந்த நற்றிணை.

ஒப்பில்லா நற்றிணை.

ஓங்கி ஒலிக்கும் நற்றிணை.

ஔவியமற்ற நற்றிணை.

அஃதே எமது நற்றிணை

நன்றி. என் போன்ற மாணவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் நற்றினை மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்றேன்.

– விஜய் ஹரி..

Best wishes for 6 th year successful running programme

– ஓம் வயலூரான் முரளி, திருச்சி.

பல்லாண்டு பணி தொடர வாழ்த்துகள்.

– அருள்செல்வன், சென்னை

Congratulations sir. Keep doing sir for the betterment of the society.

– Prof.Stephen,
Bishop Heber College, Trichy.

மென்மேலும் வளர வாழ்த்துகள்.

– பாரதிராஜா, ஹைதராபாத்.

இடைவிடாத ஆக்கத்திற்கும் தொடர் முயற்ச்சிக்கும் கிடைத்த வெற்றி. நற்றிணை பரந்து விரிந்து வளர வாழ்த்துக்கள் சார். சேவைகள் தொடரட்டும் பணிகள் சிறக்கட்டும்.

– N.உமா, ஆசிரியை, பள்ளத்தூர்.

நேயர்களுக்கு ஆறு வருடம் தான் தெரியும் சசியை 50 வருடம் தெரியும் எனக்கு குழந்தைகள் அறிவு வளர்ச்சியைமேம்படுத்தும்‌ முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

– சாதிக் அலி, புதுக்கோட்டை.

Best wishes sir

– BY K. Periasamy HM, Adavathur

வணக்கம் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நற்றிணை இனைய வானொலிக்கும் அதன் இயக்குனர் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அனைத்து உறுப்பினர்களும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் பெற்று வாழ வாழ்த்துக்கள்

– அன்புடன் எட்வர்ட் கிங் kodai fm RJ kodaikanal

நற்றிணையின் சேவைகளுடன் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகள்… மேலும் பல வெற்றிகளைப் பெற இதயப்பூர்மாக வாழ்த்துகிறேன்.

– கிருஷ்ணகுமார், கோவை.

ஜயா சிறப்பு மேன்மேலும் வளர்ந்து பல புதிய உச்சங்களை தொட இதயப்பூர்வமான வாழ்த்துக்கள்…

– ஞானவேல் முருகன்,  திருச்சி.

நற்றிணையின் சேவைகள் மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்.

– இரா.ராஜி , ஆசிரியை_ அரிமளம்.

My heariest wishes to Natrinai and its group..

– Thenmozhi muthumanickam , Anakaputhur Chennai

வாழ்த்துக்கள் திரு.ஞானப்பிரியன். உலகியலுடன் சற்று இயற்கை இயலையும் சேர்த்து மக்களுக்கு கொடுங்கள்.

– மௌனானந்தன்.

தங்கள் நற்றிணை சேவை இன்னும் பல ஆண்டுகள் கடந்து நல்ல சேவைகள் செய்ய வாழ்த்துகள்

அனலான சூரியனும், தென்றலான முழு நிலவும்,
வானோடு தான்..

பூமிக்கு வர போவதில்லை..

இன்பமும், துன்பமும் உன்னோடு தான்.

யாரும் வலி தாங்கி,
வழி தரப் போவதில்லை..

எண்ணங்களில் உண்மையோடு,
செயல்களில் வலிமையோடு செயல்பட்டு கொண்டே இருந்தால்…..

வெற்றி நிச்சயம்!

 

மகிழ்ச்சி உங்களுக்கான வாழ்த்துகள் அனைத்தும் உம்மை வந்து அடையட்டும்.

– பூ.புவனா, திருவாரூர்.

தமிழ் கடவுள் முருகன் வீடுகள் ஆறு

இப்பொழுது தமிழை வளர்க்கும் நற்றிணை எடுத்து வைப்பது வெற்றிப்படிகள் ஆண்டுகள் ஆறு.

வாழ்த்த வயதில்லை. வளர்க தமிழ். வாழ்க நற்றிணை

– நாட்டேரி குருமூர்த்தி.

நற்றிணை தமிழ் தேடல் வலை உலா…

பல திறன் மிக்க குரல்களை வெளி உலகிற்கு கொணர்ந்த தோழா…

ஞானத்தின் முயற்சியால் உன் பிறப்பு…

எங்கள் அனைவர் மனதிலும் உனக்கு என்றுமே தனிச் சிறப்பு…

வளர்க நற்றிணை வலை தளமே…

வாழ்த்துகள்…

உங்கள் முயற்சி..

நம் தமிழின் வளர்ச்சி…

நன்றி அய்யா… வாழ்த்துகள்…

பற்பல ஆண்டுகள் நற்றிணை வளர்ச்சியை எட்டும்… 

– மயிலாடுதுறை காயத்ரி.

Hits: 69

2 Responses to 1827May23

  • ஒவ்வொரு குழந்தைகளும் தனித்துவமிக்க வித்தியாசமான(ண)வர்கள் என்பதை உணர்ந்து அவர்களை ஊக்குவித்து அவர்களை ஹீரோவாக ஜொலிக்கச் செய்யும் அற்புத பணியை செம்மையாக செய்துவரும் நற்றிணை குடும்பத்திற்கு எங்கள் பள்ளி மற்றும் குழந்தைகள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்க வளமுடன் மகிழ்ச்சி

    அருள் பி ஜி

    • தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நற்றிணைக் குழுவினரின் நெஞ்சார்ந்த நன்றிகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • 240,810
  • 83,344
  • 4
நேயர் கருத்து