இயற்கை இயல்

இது நோயாளிகளுக்கான பகுதி அல்ல. நோய்களே வராமல் தடுப்பதற்கான  விழிப்புணர்வு பகுதி.

நோய்களை வளர்ப்பதற்கு ஏற்றவாறு உணவு உட்கொள்கிறோம். வந்துவிட்ட நோய்களை விரட்டுவதற்காக மருந்து மேற்கொள்கிறோம். விதவிதமான மருத்துவ முறைகளால் புதிது புதிதாய் நோய்களுக்குப் பெயர்சூட்டு விழா நடத்துகிறோம்.  மருந்துகளால் வரும் பக்கவிளைவுகள் தெரிந்தும் இருகரம் நீட்டி இன்னல்களை வரவேற்கிறோம். இது எதுவுமே இல்லாமல் இயற்கையாக வாழ்ந்தால் எப்படி இருக்கும்? எல்லாமே அற்புதமாக இருக்கும். வாழ்வே சொர்க்கமாக இருக்கும். அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? இயற்கை இயலைப் புரிந்து கொள்ள வேண்டும். புரிந்தவற்றை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். நோயில்லாத மருந்தில்லாத இன்பமான வாழ்க்கைக்கு நற்றிணையில் வலம் வரும் இயற்கை இயல் செயல்பாடுகளைப் பின்பற்றுவோம். திரு. மௌனானந்தன் முனிராஜ் அவர்களின் சேவையை உலகத் தமிழர்கள் அனைவரும் பயன்படுத்தி நோயில்லாத பெருவாழ்வு வாழ்வோமாக..! 

இந்நிகழ்ச்சி பற்றிய தங்கள் கருத்துக்களை இங்குள்ள comments பகுதியில் பதிவிடுங்கள்.

நன்றி

Hits: 642