Natrinai Trust Reg No.91/IV/2016

animated-butterfly-image-0079

animated-butterfly-image-0030

animated-butterfly-image-0030

நற்றிணை வானொலி




நிகழ்ச்சிகள்

நிநித்தம் ஒரு முத்து
அரிமளம் ஞானப்பிரியன்

ஒரு நிமிட யோசனை
அனுகீர்த்தனா


பொது அறிவுக் குவியல்
கந்தர்வகோட்டை கருப்பையா


சரித்திரம் தொட்ட சம்பவங்கள்
ஈரோடு செந்தில்குமார்


தினம் ஒரு துளி
சென்னை அலமேலு


சிலப்பதிகார விருந்து
காரைக்குடி இராம,இராமநாதன்


TODAY PROGRAMME

இன்றைய பதிவுகள்:-

சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதை
நோக்கமாகக்கொண்டு செயல்படுகிறது நற்றிணை அறக்கட்டளை

  தமிழின் பெருமையை உலகுக்கு உணர்த்துவதோடு தமிழின்மீது ஆர்வத்தை ஏற்படுத்தி தமிழ்ப் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லும் நோக்கத்தோடு துவங்கப்பட்டதே நற்றிணை அறக்கட்டளை.  ஏழை எளிய மாணவர்களின் திறமைகளை ஊக்குவிப்பதும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வதும், திறமையாளர்களை இனங்கண்’டு அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பதும் நற்றிணையின் செயல்பாடுகள் ஆகும்

 பள்ளி மாணவர்களிடையே தமிழில் பேச்சுப்போட்டியை இணையம் மூலமாக நடத்தி பரிசுகள் வழங்கி பாராட்டியுள்ளோம்.  26.12.2016 முதல் 30.12.2016 வரை திருச்சியில் நடைபெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கான கணிப்பொறி பயிற்சிக்கு நற்றிணை நேயர்களிடமிருந்து நன்கொடை வசூலித்து அளித்து பயிற்சி சிறப்பாக நடைபெற உதவியுள்ளோம். நற்றிணை இணைய ஒலிபரப்பின் 500-வது நாள் விழாக் கொண்டாட்டம் 2.10.2016 அன்று திருச்சி தமிழ்ச்சங்க வளாகத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிப் பங்களிப்பாளர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கௌரவித்தோம். வருகை தந்திருந்த நேயர்களுக்கு மதிய உணவு வழங்கி சிறப்பித்தோம்

திருச்சியில் பார்வைமாற்றுத் திறன் மாணவர்களின் கல்விக்கு உதவும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ஜெகத்ஜோதி தன்னார்வலர் அமைப்புபற்றி இணையத்தில் அறிவிப்பு செய்து புதிய நபர்களை இணைத்துள்ளோம். பார்வை மாற்றுத் திறன் மாணவர்களுக்கு புத்தகங்கள் வாசித்துக் கொடுத்தல், இணையத்திலிருந்து தேவையான பகுதிகளை பதிவிறக்கம் செய்து கொடுத்தல், போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பங்கள் பூர்த்திசெய்து கொடுத்தல் போன்ற உதவிகளை தன்னார்வலர்கள் மூலமாக செய்துவருகிறோம்.

தினந்தோறும் செய்தித் தாள்களில் வெளியாகும் முக்கியச் செய்திகளை வாசித்து இணையதளம் மற்றும் இணைய வானொலி மூலமாக ஒலிபரப்புச் செய்வது பார்வை மாற்றுத் திறனாளர்கள் மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களாலும் பெரிதும் வரவேற்கப்படுகிறது.

எதிர்வரும் காலங்களில் நற்றிணை அறக்கட்டளை சமூக அக்கறையோடு மேலும் பல
சேவைகள் தொடர்வதற்கான செயல்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.

  

நிதியுதவி செய்ய

நிகழ்ச்சிகள்

தொழில்நுட்ப சுரங்கம்
பெங்களூர் திருமணி


அறிவோம் அஞ்சல்தலை
மங்களூர் ஸ்ரீதர்



கதை சொல்லும் நீதி
திட்டக்குடி முக்கனி


ஹாரிபாட்டர்
சென்னை அரவிந்த்


சசி மாமாவும் அப்புவும்
அரிமளம் ஞானப்ரியன்